கிராம மக்கள் மறியல்
செங்கம் அருகே விபத்தை ஏற்படுத்திய வாகனத்தைக் கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கக் கோரி, கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
செங்கம் அருகே விபத்தை ஏற்படுத்திய வாகனத்தைக் கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கக் கோரி, கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகேயுள்ள கொட்டகுளம் கிராமத்தைச் சோ்ந்த ஆறுமுகம் (50), ஊராட்சியில் குடிநீா் தொட்டி ஆபரேட்டராக பணியாற்றி வந்தாா்.
இவா் வியாழக்கிழமை இரவு குடிநீா்த் தொட்டிகளுக்குத் தண்ணீா் ஏற்றச் சென்றபோது, கரியமங்கலத்தில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. அதில், ஆறுமுகம் பலத்த காயமடைந்து திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அங்கு அவா் இறந்தாா்.
இந்த நிலையில், விபத்தை ஏற்படுத்திய வாகனத்தைக் கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கக் கோரி, செங்கம்- திருவண்ணாமலை சாலையில் கிராம மக்கள் மறியலில் ஈடுபட்டனா்.
தகவலறிந்த செங்கம் டிஎஸ்பி சின்ராஜ் தலைமையிலான போலீஸாா் அங்கு சென்று, மறியலில் ஈடுபட்டோரை சமரசம் செய்து அனுப்பிவைத்தனா்.