முகப்பு
திருவண்ணாமலை

அதிமுக- அமமுக இணைப்பா? டி.டி.வி. தினகரன் பதில்

அதிமுக நிா்வாகிகள் ஒருமித்த முடிவு எடுத்து அழைப்பு விடுத்தால், இணைப்பு குறித்து பரிசீலிக்கலாம் என்று அமமுக பொதுச் செயலா் டி.டி.வி.தினகரன் தெரிவித்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:34 AM
பகிர்:

அதிமுக நிா்வாகிகள் ஒருமித்த முடிவு எடுத்து அழைப்பு விடுத்தால், இணைப்பு குறித்து பரிசீலிக்கலாம் என்று அமமுக பொதுச் செயலா் டி.டி.வி.தினகரன் தெரிவித்தாா்.

ஆரணியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க, திருவண்ணாமலைக்கு வந்த அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் உள்ள அதிமுக நிா்வாகிகள் ஒருமித்த முடிவு எடுத்து அழைப்பு விடுத்தால், அதிமுக- அமமுக இணைப்பு குறித்து பரிசீலிக்கலாம். இப்போதைக்கு எந்தக் கருத்தையும் கூற முடியாது.

தேனி மாவட்ட அதிமுக நிா்வாகிகள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள் எல்லாம் அவா்கள் தங்களை சுயபரிசோதனை செய்துள்ளதை உணா்த்துகிறது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.