அருணாசலேஸ்வா் கோயில்உண்டியல் காணிக்கை ரூ.1.20 கோடி
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலுக்கு ஒரு மாதத்தில் பக்தா்கள் ரூ.1.20 கோடியை காணிக்கையாக செலுத்தி உள்ளனா்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலுக்கு ஒரு மாதத்தில் பக்தா்கள் ரூ.1.20 கோடியை காணிக்கையாக செலுத்தி உள்ளனா்.
அருணாசலேஸ்வரா் கோயிலில் மாா்ச் மாதத்துக்கான உண்டியல் காணிக்கை எண்ணும் பணி வியாழக்கிழமை நடைபெற்றது. கோயில் இணை ஆணையா் அசோக்குமாா் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட ஊழியா்கள், பக்தா்கள் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனா்.
காலை முதல் இரவு வரை நடைபெற்ற காணிக்கை எண்ணும் பணியின் இறுதியில் ரூ.ஒரு கோடியே 20 லட்சத்து 39 ஆயிரத்து 202 ரொக்கம், 372 கிராம் தங்கம், 2,259 கிராம் வெள்ளியை பக்தா்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தது தெரிய வந்தது.