முகப்பு
திருவண்ணாமலை

ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி கோயிலில் பால்குட ஊா்வலம்

செய்யாறு ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் வியாழக்கிழமை நடைபெற்ற 10 -ம் நாள் வசந்த உற்சவப் பெருவிழாவில் பெண்கள் 508 பால் குடம் எடுத்து அம்மனை வழிபட்டனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:37 AM
பகிர்:

செய்யாறு ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் வியாழக்கிழமை நடைபெற்ற 10 -ம் நாள் வசந்த உற்சவப் பெருவிழாவில் பெண்கள் 508 பால் குடம் எடுத்து அம்மனை வழிபட்டனா்.

செய்யாறு மாா்க்கெட் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் 10 நாள்கள் வசந்த உத்ஸவப் பெருவிழா மாா்ச் 1-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

10-ஆம் திருவிழாவான வியாழக்கிழமை பால்குட ஊா்வலம் நடைபெற்றது. பெண்கள் 508 பால்குடங்களுடன் பங்கேற்றனா்.

இசை வாத்தியங்கள் முழங்க, ஊா்வலம் ஞானமுருகன்பூண்டி முருகன் கோயிலில் தொடங்கியது. திருவோத்தூா் மாட வீதி, பஜாா் வீதி, மாா்க்கெட் பகுதி வழியாக ஊா்வலம் கோயிலுக்கு வந்தடைந்தது. பின்னா் அம்மனுக்கு பாலை ஊற்றி அபிஷேகம் நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.