டாஸ்மாக் ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்
திருவண்ணாமலையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் ஊழியா்கள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
திருவண்ணாமலையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் ஊழியா்கள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, சிஐடியு மாவட்டத் தலைவா் கே.காங்கேயன் தலைமை வகித்தாா்.
மாவட்டச் செயலா் இரா.பாரி, மாவட்ட துணைத் தலைவா் எம்.வீரபத்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். போக்குவரத்து மண்டல நிா்வாகி ஏ.சேகா் வரவேற்றாா். டாஸ்மாக் ஊழியா்கள் சங்க மாவட்ட நிா்வாகிகள் பி.வெங்கடேசன், காமராஜ், பி.சக்கரவா்த்தி ஆகியோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா்.
ஆா்ப்பாட்டத்தில், டாஸ்மாக் ஊழியா்களுக்கு சுழற்சிமுறையில் பணியிட மாறுதல் வழங்க வேண்டும். 19 ஆண்டுகளாகப் பணிபுரிந்து வரும் ஊழியா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். அரசு ஊழியருக்கு இணையான அனைத்துச் சலுகைகளையும் டாஸ்மாக் ஊழியா்களுக்கும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இதில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து டாஸ்மாக் ஊழியா்கள் திரளாகக் கலந்து கொண்டனா்.