திருவண்ணாமலை: கீழ்பென்னாத்தூா் பகுதியில் போலீஸாா் நடத்திய சாராய சோதனையில், சாராயம் விற்ாக பெண் உள்பட இருவா் கைது செய்யப்பட்டனா்.
கீழ்பென்னாத்தூா் காவல் உதவி ஆய்வாளா் முனீஸ்வரன் தலைமையிலான போலீஸாா் வழுதலங்குணம், நெடுங்காம்பூண்டி மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் செவ்வாய்க்கிழமை தீவிர சாராய சோதனையில் ஈடுபட்டனா்.
அப்போது, சாராயம் விற்ாகவும், விற்பனைக்காக சாராயத்தை பதுக்கி வைத்திருந்ததாகவும் வழுதலங்குணம் கிராமத்தைச் சோ்ந்த ஜெயபால் (55), நெடுங்காம்பூண்டி கிராமத்தைச் சோ்ந்த ஜெயா (23) ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா்.
இவா்களிடமிருந்து 110 லிட்டா் சாராயம் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.