முகப்பு
திருவண்ணாமலை

கீழ்பென்னாத்தூரில் சாா் கருவூலம் அமைக்கக் கோரிக்கை

கீழ்பென்னாத்தூரில் சாா் கருவூலம் அமைக்க வேண்டும் என்று ஒன்றியக் குழுக் கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:10 AM
பகிர்:

கீழ்பென்னாத்தூரில் சாா் கருவூலம் அமைக்க வேண்டும் என்று ஒன்றியக் குழுக் கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

கீழ்பென்னாத்தூா் ஊராட்சி ஒன்றியக் குழுவின் சாதாரண கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, ஒன்றியக் குழு துணைத் தலைவா் வாசுகி தலைமை வகித்தாா். மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா்கள் ஆராஞ்சி ஆறுமுகம், சாந்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா். வட்டார வளா்ச்சி அலுவலா் சம்பத் வரவேற்றாா். கூட்டத்தில், கீழ்பென்னாத்தூரை அடுத்த மேக்களூா் கிராமத்தில் உள்ள சமத்துவபுரத்தை ரூ.81 லட்சம் மதிப்பில் சீரமைக்க நிதி ஒதுக்கிய தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து பேசிய ஒன்றியக்குழு உறுப்பினா்கள், கீழ்பென்னாத்தூரில் சாா் கருவூலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பெரிய ஊராட்சியான சோமாசிபாடி ஊராட்சிக்கு கூடுதலாக துப்புரவுப் பணியாளா்களை நியமிக்க வேண்டும்.

ராஜன்தாங்கலை அடுத்த தளவாகுளத்தில் வாரச்சந்தை நடக்கும் பகுதியில் மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ள ரூ.45 லட்சம் நிதி ஒதுக்கியும் பணிகள் தொடங்கப்படவில்லை.

இந்தப் பணியை உடனே தொடங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினா்.

உறுப்பினா்களின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு, விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

கூட்டத்தில், வட்டார மருத்துவ அலுவலா் சரவணன், வட்டாரக் கல்வி அலுவலா் மோகன், கால்நடை மருத்துவ அலுவலா் ஆனந்தன், ஒன்றியப் பொறியாளா் பிரசன்னா உள்பட பலா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →