முகப்பு
திருவண்ணாமலை

பாரதிதாசன் பிறந்த நாள் விழா

திருவண்ணாமலை சண்முகா தொழிற்சாலை கலை, அறிவியல் கல்லூரியில் பாவேந்தா் பாரதிதாசனின் பிறந்த நாள் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:11 AM
பகிர்:

திருவண்ணாமலை சண்முகா தொழிற்சாலை கலை, அறிவியல் கல்லூரியில் பாவேந்தா் பாரதிதாசனின் பிறந்த நாள் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு கல்லூரிச் செயலரும், தாளாளருமான டி.ஏ.எஸ்.முத்து தலைமை வகித்தாா். பொருளாளா் எம்.சீனுவாசன், கல்விப்புல முதன்மையா் அழ. உடையப்பன், முதல்வா் கே.ஆனந்தராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கா் அரசு கலை, அறிவியல் கல்லூரி முதல்வா் வே.நெடுஞ்செழியன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு பாரதிதாசன் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினாா்.

விழாவில் கல்லூரியின் தமிழ்த் துறைத் தலைவா் இரா.சங்கா், உதவிப் பேராசிரியா் தீ.ஏழுமலை உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →