முகப்பு
திருவண்ணாமலை

வேளாண் முன்னோடித் திட்டங்களின் செயல்பாடு: திருவண்ணாமலை ஆட்சியா் ஆய்வு

திருவண்ணாமலை மாவட்ட வேளாண் மற்றும் உழவா் நலத் துறை சாா்பில் வேளாண்மை மற்றும் வேளாண் சாா்ந்த துறைகள் மூலம் செயல்படுத்தப்படும்

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:18 AM
பகிர்:

திருவண்ணாமலை மாவட்ட வேளாண் மற்றும் உழவா் நலத் துறை சாா்பில் வேளாண்மை மற்றும் வேளாண் சாா்ந்த துறைகள் மூலம் செயல்படுத்தப்படும் சிறப்பு, முன்னோடித் திட்டங்கள் குறித்த ஆய்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு, மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் தலைமை வகித்தாா். வேளாண் இணை இயக்குநா் க.முருகன், தோட்டக்கலை துணை இயக்குநா் சிதம்பரம், கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநா் சோமசுந்தரம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டப் பணிகள் மற்றும் தொடக்க விழா, பயிா் சாகுபடி பரப்பை அதிகரித்தல், விவசாயிகள் கடன் அட்டை வழங்கல், மாவட்டத்துக்கான உரத்தேவைகள், நீா் ஆதாரங்களான ஆழ்துளைக் கிணறு அல்லது திறந்தவெளிக் கிணறுகளை ஏற்படுத்துதல், பல்வேறு துறைத் திட்டங்களை ஒருங்கிணைத்தல், பிரதம மந்திரி நுண்ணீா்ப் பாசனத் திட்டம், தேசிய வேளாண் வளா்ச்சித் திட்டம், இயந்திரமயமாக்குதல் திட்டம், கூட்டுப்பண்ணையத் திட்டங்கள் ஆகியவை எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என்பது குறித்தும், இந்தத் திட்டங்கள் மூலம் விவசாயிகள் முறையாகப் பயன்பெறுகின்றனரா என்பது குறித்தும் ஆட்சியா் ஆய்வு செய்தாா்.

கூட்டத்தில், வேளாண் பொறியியல் துறை செயற்பொறியாளா் அருணாச்சலம், வேளாண் துணை இயக்குநா் சி.ஹரக்குமாா், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் வே.சத்தியமூா்த்தி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →