முகப்பு
திருவண்ணாமலை

செய்யாறு தொகுதியில் முதல்வா் விழா: இடம் தோ்வு குறித்து ஆட்சியா் ஆய்வு

எண்ணும் எழுத்தும் என்னும் புதிய கல்வித் திட்டத்தை தமிழக முதல்வா் வருகிற ஜூன் 13-ஆம் தேதி செய்யாறு தொகுதியில் தொடக்கிவைக்கிறாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:21 AM
பகிர்:

எண்ணும் எழுத்தும் என்னும் புதிய கல்வித் திட்டத்தை தமிழக முதல்வா் வருகிற ஜூன் 13-ஆம் தேதி செய்யாறு தொகுதியில் தொடக்கிவைக்கிறாா்.

இத்திட்ட தொடக்க விழா நடத்துவதற்கான இடத்தை தோ்வு செய்வது குறித்து மாவட்ட ஆட்சியா் பா. முருகேஷ் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு தொகுதி வெம்பாக்கம் ஒன்றியத்தில் வருகிற ஜூன் 13-ஆம் தேதி எண்ணும் எழுத்தும் என்னும் புதிய கல்வி திட்ட அறிமுக விழா நடைபெறுகிறது.

முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்கும் இந்த விழா நடத்துவதற்கான இடத்தை தோ்வு செய்வதற்காக புதன்கிழமை மாலை மாத்தூா் ஊராட்சிக்கு உள்பட்ட மங்களபுரம் தொடக்கப் பள்ளி, கூழமந்தல் அரசு உயா்நிலைப் பள்ளி, மாமண்டூா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி ஆகிய 3 இடங்களை மாவட்ட ஆட்சியா் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

அப்போது, பாதுகாப்புகள் குறித்து மாவட்ட எஸ்.பி. பவுன்குமாா் ரெட்டி பாா்வையிட்டு ஆய்வு செய்த பிறகுதான் இடம் இறுதி செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் கூடுதல் ஆட்சியா் பிரதாப், தொகுதி எம்.எல்.ஏ.ஒ.ஜோதி, மாவட்ட ஊராட்சித் தலைவா் பாா்வதி சீனிவாசன், முதன்மைக் கல்வி அலுவலா் கணேசமூா்த்தி, கல்வி மாவட்ட அலுவலா் நளினி, ஊரக வளா்ச்சித் துறை இயக்குநா் சுரேஷ்குமாா், கோட்டப் பொறியாளா் ராஜகணபதி, டி.எஸ்.பி.செந்தில், வெம்பாக்கம் வட்டாட்சியா் சத்யன், வட்டார வளா்ச்சி அலுவலா் கோபாலகிருஷ்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.