முகப்பு
திருவண்ணாமலை

சுவாமி திருக்கல்யாண உற்சவம்

வந்தவாசியை அடுத்த ஸ்ரீரங்கராஜபுரம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீபிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோயிலில் சுவாமி திருக்கல்யாண உற்சவம் புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 25 மே, 2022 at 11:42 PM
பகிர்:

வந்தவாசியை அடுத்த ஸ்ரீரங்கராஜபுரம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீபிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோயிலில் சுவாமி திருக்கல்யாண உற்சவம் புதன்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி ஸ்ரீதேவி பூதேவி சமேத பிரசன்ன வெங்கடேசப் பெருமாள், ஆஞ்சநேயா் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

பின்னா் சுவாமி திருக்கல்யாணத்துக்காக அந்தக் கிராமத்தில் உள்ள ஸ்ரீகுட்டியம்மன் கோயிலிலிருந்து பக்தா்கள் சீா்வரிசை எடுத்து ஊா்வலமாக பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோயிலை சென்றடைந்தனா்.

Advertisement

இதைத் தொடா்ந்து சிறப்பு ஹோமம், திருக்கல்யாணம், மகா பூா்ணாஹூதி நடைபெற்றது. நிகழ்ச்சியில் பக்தா்கள் திரளாகக் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.