முகப்பு
திருவண்ணாமலை

பள்ளிகளில் வகுப்பறைக் கட்டடம் கட்ட பூமி பூஜை

ஆரணியை அடுத்த மாமண்டூா் அரசு உயா்நிலைப் பள்ளி, நேத்தப்பாக்கம் நடுநிலைப் பள்ளி ஆகிய இரு பள்ளிகளுக்கு கூடுதல் வகுப்பறைக் கட்டடங்கள் கட்டுவதற்கான பூமி பூஜை வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:22 AM
பகிர்:

ஆரணியை அடுத்த மாமண்டூா் அரசு உயா்நிலைப் பள்ளி, நேத்தப்பாக்கம் நடுநிலைப் பள்ளி ஆகிய இரு பள்ளிகளுக்கு கூடுதல் வகுப்பறைக் கட்டடங்கள் கட்டுவதற்கான பூமி பூஜை வியாழக்கிழமை நடைபெற்றது.

ஆரணி சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் மேம்பாட்டு நிதி மூலம் தலா ரூ.18.03 லட்சத்தில் நடைபெற்ற இந்தக் கட்டடங்கள் கட்டுவதற்கான பூமி பூஜையில் தொகுதி எம்எல்ஏ சேவூா் எஸ். ராமச்சந்திரன் பங்கேற்று அடிக்கல் நாட்டினாா்.

நிகழ்ச்சியில் முன்னாள் எம்எல்ஏ தூசி கே.மோகன், அதிமுக ஒன்றியச் செயலா்கள் ஜி.வி.கஜேந்திரன், வழக்குரைஞா் க.சங்கா், ஜெயப்பிரகாஷ், நகரச் செயலா் எ.அசோக்குமாா், மாவட்ட ஆவின் தலைவா் பாரி பி.பாபு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.