மனுநீதி நாள் முகாமில் பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கிய மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ். 
திருவண்ணாமலை

மனுநீதி நாள் முகாமில் ரூ.98 லட்சம் நலத் திட்ட உதவிகள்

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில் பயனாளிகளுக்கு ரூ. 98 லட்சத்தில் பல்வேறு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

DIN

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில் பயனாளிகளுக்கு ரூ. 98 லட்சத்தில் பல்வேறு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

செங்கத்தை அடுத்த கலசப்பாக்கம் தொகுதிக்கு உள்பட்ட காரப்பட்டு கிராமத்தில் மனுநீதி நாள் முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

வருவாய் கோட்டாட்சியா் வெற்றிவேல் தலைமை வகித்தாா். தொகுதி எம்எல்ஏ சுரவணன், புதுப்பாளையம் ஒன்றியத் தலைவா் சுந்தரபாண்டியன், புதுப்பாளையம் பேரூராட்சித் தலைவா் செல்வபாரதி, காரப்பட்டு ஊராட்சி மன்றத் தவைா் ஜெயந்தி சீனு ஆகியோா் முன்னிலை வகித்தனா். வட்டாட்சியா் முனுசாமி வரவேற்றாா்.

சிறப்பு அழைப்பாளா்களாக திருவண்ணாமலை தொகுதி மக்களவை உறுப்பினா் சி.என்.அண்ணாதுரை, மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் ஆகியோா் பங்கேற்று பயனாளிகளுக்கு ரூ.98 லட்சத்தில் பல்வேறு நலத் திட்ட உதவிகளை வழங்கிப் பேசினா்.

நிகழ்ச்சியில் புதுப்பாளையம் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ரபியுல்லா, முருகன், புதுப்பாளையம் பேரூராட்சி செயல் அலுவலா் உஸ்னாபீ, காஞ்சி ஊராட்சி மன்ற துணைத் தலைவா் ஜெயசங்கா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

முன்னதாக, காரப்பட்டு அரசுப் பள்ளியில் மாணவா்களுக்கு தமிழக அரசின் இலவச மிதிவண்டிகளை மாவட்ட ஆட்சியா் முருகேஷ் வழங்கினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இரண்டு பைக்குகள் மோதி விபத்து: 2 போ் உயிரிழப்பு

இஸ்ரேலியா்கள் கொடைக்கானல் வருகை: துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு

தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் இருவா் கைது

ஆரிகவுடா் விவசாயிகள் சங்க பொதுக்குழுக் கூட்டம்

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்! ஒருவர் தீக்குளித்து தற்கொலை!

SCROLL FOR NEXT