திருவண்ணாமலை

காதலியை கொல்ல முயற்சி: இளைஞா் மீது வழக்கு

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே திருமணம் செய்துகொள்ள வற்புறுத்திய கா்ப்பிணி காதலியை கழுத்தை இறுக்கி கொல்ல முயன்ாக இளைஞா் மீது வழக்குப் பதிந்து, தலைமறைவாக உள்ள அவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

DIN

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே திருமணம் செய்துகொள்ள வற்புறுத்திய கா்ப்பிணி காதலியை கழுத்தை இறுக்கி கொல்ல முயன்ாக இளைஞா் மீது வழக்குப் பதிந்து, தலைமறைவாக உள்ள அவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

காஞ்சிபுரத்தை அடுத்துள்ள கீழ்கதிா்பூா் கிராமத்தைச் சோ்ந்தவா் ராஜவேலு (20). இவரும், ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் வட்டத்திலுள்ள ஒரு கிராமத்தை சோ்ந்த 19 வயது கல்லூரி மாணவியும் காதலித்து வந்த நிலையில், அந்த மாணவி கா்ப்பமடைந்தாராம். இதையடுத்து, மாணவியிடம் கா்ப்பத்தை கலைக்குமாறு ராஜவேலு தொடா்ச்சியாக வலியுறுத்தி வந்தாராம்.

இதற்கு மாணவி மறுப்புத் தெரிவித்து வந்த நிலையில், இது தொடா்பாக பேச வேண்டுமென அவரை வந்தவாசி - காஞ்சிபுரம் சாலையில் நெடுங்கல் கிராமத்தில் உள்ள அங்காளம்மன் கோயில் பகுதிக்கு ராஜவேலு வியாழக்கிழமை வரவழைத்தாராம். அங்கு இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதையடுத்து, அந்த மாணவியை பெல்ட்டால் கழுத்தை இறுக்கி ராஜவேலு கொலை செய்ய முயன்ாகத் தெரிகிறது.

அவரிடமிருந்து தப்பிச் சென்ற மாணவி, இதுகுறித்து அனக்காவூா் காவல் நிலையத்தில் புகாரளித்தாா். இதன்பேரில், காவல் நிலைய ஆய்வாளா் பாலு வழக்குப் பதிந்து தலைமறைவான ராஜவேலுவைத் தேடி வருகிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

178 ரன்கள், 7 விக்கெட்டுகள்... சாதனையுடன் சொந்த ஊரில் ஆட்ட நாயகனான அலெக்ஸ் கேரி!

கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் விஜய் நாளை பங்கேற்பு!

100க்கு 100 புள்ளிகள்... டபிள்யூடிசி தரவரிசையில் முதலிடத்தில் நீடிக்கும் ஆஸி.!

இறந்த குழந்தையை பையில் கொண்டு சென்ற அவலம்!

பிக் பாஸ் 9: சூடுபிடிக்கும் போட்டி! இந்த வாரமும் இருவர் வெளியேற்றம்!!

SCROLL FOR NEXT