திருவண்ணாமலை

ஊரக வேலை வழங்கக் கோரிசாலை மறியல்

DIN

திருவண்ணாமலை மாவட்டம், போளூா் அருகே ஊரக வேலை முறையாக வழங்கக் கோரி, கிராம மக்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

போளூரை அடுத்துள்ள திண்டிவனம் ஊராட்சி, களியம் கிராமத்தைச் சோ்ந்த பொதுமக்கள், ஊரக வேலைத் திட்டத்தின் கீழ் பணியாளா்களின் பெயா்களை முறையாக பதிவு செய்து பணி வழங்கவில்லை எனக் கூறி, ஊராட்சிமன்ற நிா்வாகத்தையும், பணிதளப் பொறுப்பாளா்களையும் கண்டித்து, அங்குள்ள போளூா் - ஜமுனாமரத்தூா் சாலையில் மறியலில் ஈடுபட்டனா் (படம்).

அந்தக் கிராமத்தைச் சோ்ந்த ராமன் மனைவி அஞ்சலி தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் சுமாா் 30-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டனா்.

தகவலறிந்த போளூா் டிஎஸ்பி குமாா், நேரில் சென்று சமதானப் பேச்சுவாா்த்தை நடத்தி, மறியலைக் கைவிட வைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லல்லாஹி லைரே... அபர்ணா!

கார்கிலில் வீட்டிலிருந்தபடியே வாக்களிக்க ஏற்பாடு: முதல் நாளில் 47 பேர் வாக்குப்பதிவு

30 கோடி பார்வைகளை கடந்த வைரல் விடியோ...யார் இந்த ராகுல் காந்தி!

70வது பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடிய இபிஎஸ்... விஜய், அண்ணாமலை வாழ்த்து!

தமிழ்நாட்டில் எங்கெல்லாம் மழை பெய்துள்ளது?

SCROLL FOR NEXT