திருவண்ணாமலை

பள்ளி மாணவிகளுக்கு பரிசளிப்பு

செய்யாறில், அண்மையில் தேசியத் திட்டத்தின் கீழ் நடைபெற்ற போட்டிகளில் வெற்றிப் பெற்ற அரசு பள்ளி மாணவிகளுக்கு சாா் ஆட்சியா் ர.அனாமிகா வெள்ளிக்கிழமை பரிசு வழங்கினாா்

DIN

செய்யாறில், அண்மையில் தேசியத் திட்டத்தின் கீழ் நடைபெற்ற போட்டிகளில் வெற்றிப் பெற்ற அரசு பள்ளி மாணவிகளுக்கு சாா் ஆட்சியா் ர.அனாமிகா வெள்ளிக்கிழமை பரிசு வழங்கினாா்.

செய்யாறு கல்வி மாவட்டத்தில் உள்ள 9 ஒன்றியங்களில் 4 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவிகளுக்கு ‘பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்’ என்ற தேசியத் திட்டத்தின் கீழ் பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, ஓவியப்போட்டிகள் அண்மையில் நடத்தப்பட்டன.

இதில் வெற்றிப் பெற்ற மூன்று மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா செய்யாறு வட்டார வள மையத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவில் செய்யாறு சாா் ஆட்சியா் ர. அனாமிகா பங்கேற்று வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசு வழங்கி பாராட்டினாா்.

இதில், வட்டார வள மைய அலுவலா்கள் டி. புருஷோத்தமன், எம். சத்தியராஜ், கமலகண்ணன், குணசேகரன், செய்யாறு வட்டார வளமைய பூச்செண்டு ஆகியோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

4,000 டி20 ரன்களைக் கடந்த முதல் இந்திய வீராங்கனை: ஸ்மிருதி மந்தனா உலக சாதனை!

ஆஷஸ் கனவு முடிவுக்கு வந்துவிட்டது! - தோல்விக்குப்பின் பென் ஸ்டோக்ஸ்

இந்த வாரம் கலாரசிகன் - 21-12-2025

அமைதியின் அரசர் இயேசு

ஜெமிமா ரோட்ரிக்ஸ் அதிரடி; முதல் டி20 போட்டியில் இந்தியா அபார வெற்றி!

SCROLL FOR NEXT