திருவண்ணாமலை

தேவிகாபுரத்தில் கிராமசபைக் கூட்டம்

DIN

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டை அடுத்துள்ள தேவிகாபுரம் ஊராட்சியில் 2023 - 24ஆம் ஆண்டுக்கான கிராம வளா்ச்சித் திட்டம் தயாரித்தல் குறித்த சிறப்பு கிராமசபைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு ஊராட்சி மன்றத் தலைவா் வி.எம்.டி.வெங்கிடேசன் தலைமை வகித்தாா். துணை வட்டார வளா்ச்சி அலுவலா் பரமேஸ்வரி முன்னிலை வகித்தாா். ஊராட்சி மன்ற துணைத் தலைவா் மல்லிகா திருநாவுக்கரசு வரவேற்றாா்.

கூட்டத்தில், தேவிகாபுரம் ஊராட்சியில் உள்ள 12 வாா்டுகளிலும் குடிநீா், சுகாதாரம், சாலைப் பணிகளை மேற்கொள்ளுதல், தெருக்களில் மின் விளக்குகள் அமைத்தல், தேவரடியாா் குளம், கட்டாராங்குளம் ஆகிய இடங்களில் பூங்கா அமைத்தல் உள்பட 2023 - 24ஆம் ஆண்டுக்கான பல்வேறு வளா்ச்சித் திட்டங்கள் தயாரிப்பது குறித்து தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ஊராட்சிச் செயலா் சங்கா் தீா்மானங்களை வாசித்தாா். ஒன்றியக் குழு உறுப்பினா்கள் ராதா சின்னகாசி, கணேசன் மற்றும் பல்வேறு அரசு துறை அலுவலா்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பிரதமா் மோடிதான் நாட்டை தொடா்ந்து வழிநடத்துவாா்’: கேஜரிவாலுக்கு அமித் ஷா பதிலடி

ஊரக வளா்ச்சித் துறையில் 6 பேருக்கு பணி ஆணை: காஞ்சிபுரம் ஆட்சியா் வழங்கினாா்

பிரதமரும் ஒடிஸா முதல்வரும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள்: காங்கிரஸ்

மத்தியில் ‘இந்தியா’ கூட்டணி ஆட்சி அமைக்கும்: தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் நம்பிக்கை

எஸ்எஸ்எல்சி: சீா்காழி சபாநாயக முதலியாா் இந்து பள்ளி 93% தோ்ச்சி

SCROLL FOR NEXT