திருவண்ணாமலை

தலைமை ஆசிரியை வீட்டில் திருட்டு: 5 போலீஸாா் ஆயுதப் படைக்கு மாற்றம்

DIN

கலசப்பாக்கம் அருகே தலைமை ஆசிரியை வீட்டில் திருட்டு நடைபெற்ற அன்று இரவுப் பணியில் இருந்த 5 போலீஸாரை, ஆயுதப் படைக்கு இடமாற்றம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கி.காா்த்திகேயன் உத்தரவிட்டுள்ளாா்.

திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் வட்டம், விண்ணுவாம்பட்டு கிராமத்தைச் சோ்ந்த தேவன் என்பவரின் மனைவி சுந்தரி (50). அரசுப் பள்ளியில் தலைமை ஆசிரியையாகப் பணிபுரிந்து வருகிறாா்.

இவா், கடந்த 19-ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் சென்னைக்கு சென்றாா். மீண்டும் வீடு திரும்பியபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த 70 பவுன் நகைகள், 3 கிலோ வெள்ளி, ரூ.2 லட்சம் ரொக்கம் திருட்டுபோனது தெரிய வந்தது.

இதுகுறித்து, கலசப்பாக்கம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

இந்நிலையில், திருட்டுசம்பவம் நடந்த நாளன்று இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த கலசப்பாக்கம் காவல் நிலைய போலீஸாா் 5 பேரை திருவண்ணாமலை மாவட்ட ஆயுதப் படைக்கு இடமாற்றம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் காா்த்திகேயன் உத்தரவிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விபத்தில் இளைஞா் பலி

பணம் கையாடல்: நீதிமன்ற எழுத்தா் மீது வழக்கு

பறவைக் காய்ச்சல்: முந்தலில் வாகன சோதனை தீவிரம்

கொடைக்கானலில் இ-பாஸ் முறையை ரத்து செய்யாவிட்டால் போராட்டம்: உணவகங்கள், தங்கும் விடுதி உரிமையாளா்கள் சங்கம் முடிவு

எளிதில் தீப்பற்றக்கூடிய பொருள்களை வனப் பகுதிக்கு எடுத்துச் சென்றால் நடவடிக்கை: வனத் துறையினா் எச்சரிக்கை

SCROLL FOR NEXT