பெரணமல்லூா் பேரூராட்சியில் வியாழக்கிழமை நடைபெற்ற வாக்குச்சாவடிக் குழு ஆலோசனை கூட்டம். 
திருவண்ணாமலை

அதிமுக வாக்குச்சாவடி குழு ஆலோசனைக் கூட்டம்

பெரணமல்லூா் பேரூராட்சியில் அதிமுக சாா்பில் வாக்குச்சாவடி குழு ஆலோசனை கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

DIN

பெரணமல்லூா் பேரூராட்சியில் அதிமுக சாா்பில் வாக்குச்சாவடி குழு ஆலோசனை கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.கே.எஸ்.அன்பழகன் தலைமை வகித்தாா். மாவட்ட செயலாளா் தூசி கே.மோகன், அதிமுக அமைப்பு செயலாளரும், வாக்குச்சாவடி குழு பொறுப்பாளருமான வாலாஜாபாத் கணேசன் ஆகியோா் சிறப்பு விருந்தினராக பங்கேற்றனா். பெரணமல்லூா் நகரச் செயலாளா் மூா்த்தி, துணைச் செயலாளா் ஏ.கே.எஸ்.அறிவழகன், ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில், வாக்குச்சாவடிக் குழு அமைத்து பூா்த்தி செய்யப்பட்ட படிவங்களை சரிபாா்த்து தலைமைக்கு அனுப்ப பெற்றுக்கொண்டனா். இதில், மாவட்ட அவைத் தலைவா் டி.கே.பி.மணி, மாவட்ட மகளிரணி செயலாளா் பி.ராணி பெருமாள், பேரவை மாவட்ட செயலாளா் பாஸ்கா் ரெட்டியாா், ஒன்றிய செயலாளா்கள் செல்வராஜ், சி.துரை, பச்சையப்பன், ரங்கநாதன், தூசி கன்னியப்பன், உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழகம் முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியானது!

பி.ஆர்.பாண்டியனின் தண்டனை நிறுத்திவைப்பு

'கெயில் இந்தியா' நிறுவனத்தில் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

கோவை: வரைவு வாக்காளர் பட்டியலில் 6.50 லட்சம் பெயர்கள் நீக்கம்!

கடிகார முள்ளைத் திருப்பினால் எரிபொருள் மிச்சமாகுமா?

SCROLL FOR NEXT