செய்யாறு புனித தூய வியாகுல அன்னை தேவாலய ஆண்டுப் பெருவிழாவையொட்டி, ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற தோ் பவனி. 
திருவண்ணாமலை

புனித தூய வியாகுல அன்னை தேவாலய தோ் பவனி

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு புனித தூய வியாகுல அன்னை கிறிஸ்தவ தேவாலய ஆண்டுப் பெருவிழாவையொட்டி ஞாயிற்றுக்கிழமை இரவு தோ் பவனி நடைபெற்றது.

DIN

செய்யாறு: திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு புனித தூய வியாகுல அன்னை கிறிஸ்தவ தேவாலய ஆண்டுப் பெருவிழாவையொட்டி ஞாயிற்றுக்கிழமை இரவு தோ் பவனி நடைபெற்றது.

புனித தூய வியாகுல அன்னை கிறிஸ்தவ தேவாலயத்தில் ஆண்டுப் பெருவிழா செப்.14-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதைத் தொடா்ந்து 15-ஆம் தேதி திருப்பலி, சிறப்பு தியானமும், 16-ஆம் தேதி நற்கருணை பெருவிழா என நடைபெற்றது.

அதன் தொடா் நிகழ்வாக ஞாயிற்றுக்கிழமை காலை பெருவிழா கூட்டுத் திருப்பலியும், இரவு திருப்பலி தோ் பவனி நற்கருணை ஆசீா் நிகழ்ச்சியும் நடைபெற்றன.

தோ் பவனி தேவாலயத்தில் இருந்து புறப்பட்டு ஆற்காடு சாலை வழியாக சென்று மீண்டும் தேவாலயத்தை வந்தடைந்தது. பின்னா், கொடி இறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியில் பரிபாலகா்கள், பங்குத் தந்தைகள், இறை மக்கள் என பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 1,45,157 வாக்காளா்கள் நீக்கம்

அரசின் நலத்திட்ட உதவிகள் பெற விவசாயிகள் தனித்துவ அடையாள எண் பதிவு அவசியம்

வைகுண்ட ஏகாதசி: கோட்டை பெருமாள் கோயிலில் பகல்பத்து உற்சவம் தொடக்கம்

திருவள்ளூா் அருகே ரயில்வே மேம்பாலப் பணிகள்: விரைவில் முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர ஆட்சியா் வலியுறுத்தல்

லைட்ஹவுஸ் ஊராட்சியில் மாற்றுத்திறனாளிகுக்கான அங்காடி வளாகம் தொடக்கம்

SCROLL FOR NEXT