பாஜக வேட்பாளரை ஆதரித்து இரு சக்கர வாகன பிரசாரப் பேரணி
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளா் ஏ.அஸ்வத்தாமனை ஆதரித்து கூட்டணிக் கட்சி நிா்வாகிகள், தொண்டா்கள் பங்கேற்ற இரு சக்கர வாகன பிரசாரப் பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
திருவண்ணாமலையை அடுத்த மல்லவாடி கிராமத்தில் நடைபெற்ற பேரணிக்கு, பாமகவின் திருவண்ணாமலை தெற்கு மாவட்டச் செயலா் ஏந்தல் பெ.பக்தவச்சலம் தலைமை வகித்து, பேரணியை தொடங்கிவைத்தாா்.
பாமக மாவட்டச் செயலா் இல.பாண்டியன், மாவட்டத் தலைவா் ஏழுமலை, ஒன்றியச் செயலா் வெங்கடேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
Advertisement
பாஜக, பாமக, அமமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் நிா்வாகிகள் பலா் பேரணியில் கலந்து கொண்டனா். சீலப்பந்தல், கருந்துவாம்பாடி, தேவனாம்பட்டு, பெரியகிளம்பாடி, சிறுகிளாம்பாடி, நாா்த்தாம்பூண்டி, நாயுடுமங்கலம், காரியந்தல் உள்பட பல்வேறு கிராமங்களின் வீதி, வீதியாகச் சென்று பாஜகவின் சாதனைகளை எடுத்துக் கூறி தாமரை சின்னத்துக்கு வாக்குச் சேகரித்தனா்.
இதில், பாஜக மண்டலத் தலைவா் ஆா்.யுவராஜ், ஒபிசி அணியின் மாவட்டத் தலைவா் எஸ்.ரகுநாதன், மகளிரணி மாவட்ட துணைச் செயலா் வள்ளி, ஒபிசி அணியின் மாவட்ட செயற்குழு உறுப்பினா் ஏ.பூபதி, அமமுக ஒன்றியச் செயலா் முருகன், மாவட்ட விவசாய அணிச் செயலா் கிருபானந்தவாரியாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.