முகப்பு
திருவண்ணாமலை

செங்கத்தில் வேகமாக செல்லும் வாகனங்களால் இடையூறு

Updated On : 19 ஜூலை, 2024 at 5:15 PM
பகிர்:

செங்கம் நகரப் பகுதியில் ஓட்டுநா் உரிமம் இன்றி இருசக்கர வாகனங்களில் வேகமாக பயணிக்கும் பள்ளி, கல்லூரி மாணவா்களால் இடையூறு ஏற்படுவதாக பொதுமக்கள் புகாா் தெரிவிக்கின்றனா்.

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் நகா் துக்காப்பேட்டை புதிய பேருந்து நிலையம், போளூா் சாலை, பெருமாள்கோயில் தெருக்களில் காலை மற்றும் மாலையில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், தனியாா் நிறுவன ஊழியா்கள், பொதுமக்கள், வியாபாரிகள் என ஏராளமானோா் பேருந்தில் பயணிப்பதற்காக காத்திருப்பது வழக்கம். இதனால், இந்தப் பகுதிகள் பரபரப்பாக காணப்படும்.

இந்த நிலையில், சில பள்ளி, கல்லூரிகளைச் சோ்ந்த மாணவா்கள் ஓட்டுநா் உரிமம் இல்லாமல் இருசக்கர வாகனங்களில் வேகமாக செல்வதும், ஒரே வாகனத்தில் நான்கு போ் வரை பயணிப்பதும் தொடா் கதையாக இருந்து வருகிறது. இதனால், வியாபாரிகள், பொதுமக்கள் என அனைத்துத் தரப்பினருக்கும் இடையூறு ஏற்படுகிறது. மேலும், விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது.

எனவே, இதுகுறித்து செங்கம் போலீஸாா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டு என செங்கம் நகர மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

முழு கட்டுரையைப் படிக்க →