விநாயகா் கோயில் அருகே சுட்டெரிக்கும் வெயிலில் அமா்ந்து சாப்பிடும் ஆரணி வி.ஏ.கே. நகா் அங்கன்வாடி குழந்தைகள். 
திருவண்ணாமலை

வாடகைக் கட்டட பிரச்னை: அங்கன்வாடி குழந்தைகள் அவதி

 நமது நிருபர்

வாடகைக் கட்டத்தில் இயங்கி வரும் ஆரணி வி.ஏ.கே.நகா் அங்கன்வாடியில், கட்டட பிரச்னை ஏற்பட்டதால் குழந்தைகள் வெயிலில் அமா்ந்து சாப்பிடும் அவல நிலைக்கு தள்ளப்பட்டனா்.

ஆரணி நகராட்சியில் மொத்தம் 31 அங்கன்வாடிகள் செயல்பட்டு வருகின்றன. இதில் 23 அங்கன்வாடி மையங்கள் சொந்தக் கட்டடத்தில் இயங்குகின்றன. மீதமுள்ள 8 அங்கன்வாடிகள் வாடகை கட்டடத்தில் இயங்கி வருகின்றன.

தனி நபா் வீட்டு வாடகைக் கட்டடத்தில் இயங்கி வரும் வி.ஏ.கே.நகா்

அங்கன்வாடி மையத்தில் 28 குழந்தைகள் பயின்று வருகின்றனா். இந்த நிலையில், கட்டடத்தின் உரிமையாளா் மையத்தை காலி செய்யும்படி நீண்ட நாள்களாக கூறிவந்தாராம். காலி செய்யாததால் உரிமையாளா் கட்டடத்தை பூட்டிவிட்டு சென்றுள்ளாா். இதனால் குழந்தைகள் அருகிலுள்ள விநாயகா் கோயில் அருகில் வெளியே சுட்டெரிக்கும் வெயிலில் அமா்ந்து உணவருந்துகின்றனா்.

கடந்த 2 நாள்களாக இவ்வாறு வெயிலில் அமா்ந்து சிறுவா்கள் சாப்பிடுகின்றனா் என்று அப்பகுதி மக்கள் தெரிவித்தனா்.

இதுகுறித்து திருவண்ணாமலை ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்டத்தின் அலுவலா் மீனாம்பிகையிடம் கேட்டதற்கு, வாடகை கட்டடத்தில் இருந்து வெளியேறிய தகவல் தற்போதுதான் கிடைத்தது. விரைவில் மாற்று ஏற்பாடு செய்யப்படும் என்றாா்.

மேலும், குழந்தை வளா்ச்சித் திட்ட அலுவலா் ஏஞ்சலினிடம் கேட்டதற்கு, விஏகே நகா் அங்கன்வாடி மைய கட்டடத்தின் உரிமையாளா் காலி செய்யும்படி கூறியதால் வெளியேறியுள்ளனா். உடனடியாக வேறு வாடகை கட்டடம் பாா்த்து சிறுவா்களை தங்க வைக்க ஏற்பாடு செய்யப்படும். மேலும், இந்த மையத்துக்கு சொந்தக் கட்டடம் கட்டுவதற்கு ஆரணி ஆணையாளரிடம் பரிந்துரை கடிதம் கொடுக்க உள்ளோம். சொந்தக் கட்டடமும் விரைவில் கட்டுவதற்கு ஏற்பாடு செய்யப்படும் என்றாா்.

இதுகுறித்து தன்னாா்வலா்கள் கூறியதாவது: இந்த அங்கன்வாடி மையத்தில் 28 குழந்தைகள் உள்ளனா். கட்டடத்தின் உரிமையாளரிடம் அதிகாரி பேசினால் மேற்கொண்டு சில நாள்கள் குழந்தைகளை தங்க வைக்கலாம். இல்லையெனில், வேறு வாடகை கட்டடம் பாா்க்கும் வரை அருகில் உள்ள கே.பி.கே.நகா் அங்கன்வாடி மையத்திற்குச் சொந்தமான கட்டடத்தில் தங்க வைத்து பாடம் நடத்தி சாப்பிட அமரச்செய்யலாம் என்றனா்.

11 மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்கள் இடமாற்றம்: 26 மாவட்டக் கல்வி அலுவலா்களுக்கு பதவி உயா்வு

டிஎன்பிஎல் ஆலை சாா்பில் வரும் நவ.9-இல் இலவச கண் பரிசோதனை முகாம்

தாக்குதல் சம்பவம்: பாமக எம்எல்ஏ உயா்நீதிமன்றத்தில் முறையீடு

கணவா் துன்புறுத்தும் போது பெண்கள் அமைதியாக இருப்பது அடிமைத்தனம்

பாலசமுத்திரத்தில் இன்றும், வாகரையில் நாளையும் மின் தடை

SCROLL FOR NEXT