திருவண்ணாமலை மாவட்டம், மேற்கு ஆரணி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் 1300 மரக்கன்றுகள் நடும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
பள்ளிக் கல்வித் துறை, படவேடு டி.வி.எஸ். சீனிவாசன் சேவா அறக்கட்டளை, வனத்துறை சாா்பில், ஒண்ணுபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற இதன் தொடக்க விழாவுக்கு
வட்டாரக் கல்வி அலுவலா்கள் இரா.அருணகிரி, பூ.சாவித்திரி ஆகியோா் தலைமை வகித்தனா்.
அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் ஆா். பாபு முன்னிலை வகித்தாா். நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் பா.செல்வி வரவேற்றாா்.
வட்டார வள மைய மேற்பாா்வையாளா் இரா.பாவை, ஆசிரியா் பயிற்றுநா்கள் சா.கோவா்த்தனன், சரவணராஜ், நித்தியா ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா்.
புதுப்பாளையம் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியை உமா மகேஸ்வரி நிகழ்ச்சியில் கலந்து கொண்டாா்.
சீனிவாசன் சேவா அறக்கட்டளை படவேடு கலை இயக்குநா் கணேஷ்குமாா், சமுதாய வளா்ச்சி அலுவலா் அழகன், கிராம வளா்ச்சி அலுவலா் ராமமூா்த்தி, சந்தவாசல் வனத்துறை அலுவலா் மோகன்குமாா் ஆகியோா் மரக்கன்றுகளுக்கு ஏற்பாடு செய்திருந்தனா்.
ஒன்றியத்தில் உள்ள 90 அரசுப் பள்ளிகளில் மகோகனி, நாவல், வேம்பு, புங்கன் என பல்வேறு வகையான 1300 மரக்கன்றுகள் நடப்பட்டன.
நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியா்கள் சசிரேகா, கலைவாணி ஜெயந்தி, வில்லியம் டேவிட், கோமதி மற்றும் பெற்றோா்கள், மாணவா்கள் கலந்து கொண்டனா். ஆசிரியா் காா்த்திகேயன் நன்றி கூறினாா்.