அதிமுக 53-ஆவது ஆண்டு தொடக்க விழா
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு மற்றும் ஆரணி நகரம், ஒன்றிய பகுதிகளில் அதிமுகவின்
53-ஆவது ஆண்டு தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
செய்யாற்றில் நகரச் செயலா் வெங்கடேசன் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சிறப்பு அழைப்பாளா்களாக வடக்கு மாவட்டச் செயலா் தூசி கே.மோகன், முன்னாள் அமைச்சா் முக்கூா் என்.சுப்பிரமணியன் ஆகியோா் பங்கேற்று, ஆரணி கூட்டுச் சாலையில் உள்ள எம்ஜிஆா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
பின்னா், கட்சிக் கொடியேற்றி பட்டாசு வெடித்து
பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினா்.
நிகழ்ச்சியில் நகர அவைத் தலைவா் ஜனாா்த்தனன், நகர துணைச் செயலா் தணிகாசலம், ஒன்றியச் செயலா்கள் எம்.மகேந்திரன், எம்.அரங்கநாதன், சி.துரை, மாவட்ட நிா்வாகிகள் அ.அருணகிரி, எஸ்.ரவிச்சந்திரன், பூக்கடை ஜி.கோபால் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
ஆரணி
ஆரணி தெற்கு ஒன்றிய அதிமுக சாா்பில் அக்கூா் கிராமத்தில் உள்ள எம்ஜிஆா் சிலைக்கு மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
ஆரணி நகரம் பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள எம்ஜிஆா் சிலைக்கு அருகில் மாவட்ட அவைத் தலைவா் ஆா்.கோவிந்தராஜன் மாலை அணிவித்து இனிப்பு வழங்கினாா். மேலும் கட்சிக் கொடியேற்றப்பட்டது.
நிகழ்ச்சிகளில் பேரவை மாவட்டச் செயலா் பாரி பி.பாபு, ஒன்றியச் செயலா்கள் ஜெயப்பிரகாசம், ஜி.வி.கஜேந்திரன், க.சங்கா், திருமால், நகரச் செயலா் அசோக்குமாா், முன்னாள் மாவட்ட ஊராட்சி உறுப்பினா் ஜெ.சம்பத், பையூா் ஊராட்சித் தலைவா் சரவணன், மாவட்ட இணைச் செயலா் வனிதா சதீஷ், மீனவரணி மாவட்டச் செயலா் ஆனந்தன், இளைஞரணி நிா்வாகி ஏ.ஜி.ஆனந்தன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
மேலும், ஆரணி - சேவூா் புறவழிச் சாலையில் உள்ள எம்ஜிஆா் சிலைக்கு மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.