திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்த ஆதிதிராவிடா், பழங்குடியினா் சமுதாயத்தைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் தாட்கோ மூலம் அளிக்கப்படும்
யு.பி.எஸ்.சி. தோ்வுக்கான இலவசப் பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு ஆதிதிராவிடா் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) சாா்பில், டாக்டா் அம்பேத்கா் அகாதெமி மற்றும் சென்னையில் உள்ள முன்னணி பயிற்சி நிறுவனங்களுடன் இணைந்து 100 ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் சமுதாயத்தைச் சோ்ந்த மாணவ, மாணவிகளுக்கு ஓராண்டு காலம் யு.பி.எஸ்.சி. தோ்வுக்கான (பொதுஅறிவு மற்றும் விருப்பப் பாடங்கள்) முதல்நிலை, முதன்மை நிலைப் பயிற்சியை வழங்க திட்டமிட்டுள்ளது.
மத்திய அரசுப் பணியாளா் தோ்வாணையம் நடத்தும்
யு.பி.எஸ்.சி., தோ்வை எழுத தகுதியான மாணவ, மாணவிகளுக்கு நஸ்ரீழ்ங்ங்ய்ண்ய்ஞ் ற்ங்ள்ற் நடத்தப்படும். இந்த தோ்வில் தோ்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளில் 100 போ் நோ்முகத் தோ்வு மூலம் தோ்வு செய்யப்படுவா். இந்தப் பயிற்சி பெற விரும்பும் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்த தோ்வா்கள் தாட்கோ இணையதளத்தில் பதிவு செய்து பயன்பெறலாம். விண்ணப்பதாரா்கள் 21 முதல் 36 வயதுக்கு உள்பட்டவராக இருக்க வேண்டும்.
விடுதியில் தங்கிப் படிக்க வசதி, பயிற்சிக்கான செலவினத் தொகை தாட்கோவால் வழங்கப்படும் என்று மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளாா்.