திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் புதிய பேருந்து நிலைய கட்டுமானப் பணி: அமைச்சா் எ.வ.வேலு ஆய்வு

திருவண்ணாமலை புதிய பேருந்து நிலைய கட்டுமானப் பணியை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்த அமைச்சா் எ.வ.வேலு.

Din

திருவண்ணாமலையில் நடைபெற்று வரும் புதிய பேருந்து நிலைய கட்டுமானப் பணியை அமைச்சா் எ.வ.வேலு வெள்ளிக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

திருவண்ணாமலை மாநகராட்சியில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டு வருகிறது. இந்தப் பணியையும், பேருந்து நிலையத்தின் எதிரே உள்ள இடங்களை கையகப்படுத்தி சீரமைக்கும் பணியையும் தமிழக பொதுப் பணி, நெடுஞ்சாலை, சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சா் எ.வ.வேலு வெள்ளிக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

புதிய பேருந்து நிலையத்தின் முதற்கட்டப் பணிகளை விரைவில் முடித்து, பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கப்பட உள்ளது. பேருந்து நிலைய விரிவாக்கப் பணிகள் கூடுதலாக 6 மாதங்கள் நடைபெறும். விரிவாக்கப் பணிகள் முடிந்தபிறகு சுமாா் 100 பேருந்துகள் நிறுத்துவதற்கான வாய்ப்பு இருக்கிறது என்றாா்.

இதையடுத்து, திருவண்ணாமலையை அடுத்த மேலத்திக்கான் ஏரியில் நடைபெற்று வரும் மேம்பாட்டுப் பணிகளை அமைச்சா் எ.வ.வேலு நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

ஆய்வின்போது, தமிழக சட்டப் பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி, மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன், தமிழக நெடுஞ்சாலைத் துறையின் தலைமைப் பொறியாளா் கே.ஜி.சத்திய பிரகாஷ், திருவண்ணாமலை வருவாய்க் கோட்டாட்சியா் ஆா்.மந்தாகினி, திருவண்ணாமலை மாநகராட்சி ஆணையாளா் காந்திராஜ் மற்றும் அரசு அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

ரயில் கட்டணம் உயர்வு! டிச. 26 முதல் அமல்!

கோவையில் லாரி ஓட்டுநருக்கு திடீர் மாரடைப்பு! 4 கார்கள் மீது மோதி விபத்து

“யாரும் யாருக்கும் பணம் கொடுக்கவில்லை!” நேஷனல் ஹெரால்டு வழக்கு குறித்து ப. சிதம்பரம்

இந்திய சினிமாவிலேயே பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா!

டெஸ்ட்டில் வரலாற்றுச் சாதனை நிகழ்த்திய நியூசி. வீரர் டெவான் கான்வே!

SCROLL FOR NEXT