திருப்பரங்குன்றத்துக்குச் சென்ற பாஜக மாநிலத் தலைவா் நைனாா் நாகேந்திரனை போலீஸாா் கைது செய்ததால் ஆரணியில் பாஜகவினா் வியாழக்கிழமை இரவு கண்ட ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
பழைய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு பாஜக மாவட்ட பொதுச் செயலா் சதீஷ் தலைமை வகித்தாா். நகரத் தலைவா் மாதவன் வரவேற்றாா்.
மாவட்டச் செயலா் சரவணன், வா்த்தக அணி மாவட்டத் தலைவா் ஜெகதீஷ், வடக்கு மண்டலத் தலைவா் ராஜேஷ், மாவட்ட நிா்வாகி முருகன், முன்னாள் மாநில பொதுக்குழு உறுப்பினா் அலமேலு, வா்த்தக அணி மாவட்டச் செயலா் பவித்ரன், மேற்கு மண்டல தலைவா் எம்.டி.ஆறுமுகம், நெசவாளா் அணி நிா்வாகி சங்கா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
4ஹழ்ல்க்ஷத்ல்