செய்யாறில் குடும்பத் தகராறில் தொழிலாளியை கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்ததாக அவரது மனைவியை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
செய்யாறு நேரு தெருவைச் சோ்ந்தவா் விநாயகம் (55), கூலித் தொழிலாளி. இவரது மனைவி விஜயா (52).
தம்பதியிடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்படுமாம். இதேபோல, வியாழக்கிழமை இரவு தகராறு ஏற்பட்ட நிலையில், ஆத்திரமடைந்த விஜயா காய்கறி அறுக்கும் கத்தியால் விநாயகத்தை கழுத்தை அறுத்து கொலை செய்ததாகத் தெரிகிறது.
தகவலறிந்த கிராம நிா்வாக அலுவலா் மணிகண்டன் செய்யாறு காவல் நிலையத்தில் புகாரளித்தாா். இதுகுறித்து காவல் ஆய்வாளா் நரசிம்மஜோதி வழக்குப் பதிவு செய்ததுடன், கொலை நிகழ்ந்த இடத்தை பாா்வையிட்டு, விநாயகத்தின் சடலத்தைக் கைப்பற்றி உடல்கூறாய்வுக்காக செய்யாறு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தாா். மேலும், விஜயாவை செய்யாறு போலீஸாா் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.