முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் 9-ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அவரது உருவப் படத்துக்கு அதிமுகவினா் வெள்ளிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
ஆரணி சட்டப் பேரவை உறுப்பினா் அலுவலக வளாகத்தில் ஜெயலலிதா உருவப் படத்துக்கு எம்எல்ஏ சேவூா் எஸ்.ராமச்சந்திரன் மலரஞ்சலி செலுத்தினாா்.
நிகழ்வில் நகரச் செயலா் அசோக்குமாா், ஒன்றியச் செயலா் ஜெயபிரகாஷ், அதிமுக நகா்மன்ற உறுப்பினா் குமரன், தகவல்தொழில்நுட்ப அணி மண்டல பொருளாளா் சரவணன், எஸ்.வி.நகரம் முன்னாள் ஊராட்சித் தலைவா் வாசு, முன்னாள் ஒன்றியக் குழு உறுப்பினா் கவிதா பாபு உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
அதிமுக சாா்பில்....: ஆரணி அண்ணா சிலை அருகிலிருந்து அதிமுக மாவட்ட அவைத் தலைவா் அ.கோவிந்தராஜன் தலைமையில் கட்சியினா் ஊா்வலமாக ஆரணி பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள எம்ஜிஆா் சிலை வரை சென்றனா். அங்கு அமைக்கப்பட்டிருந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதா உருவப்படத்துக்கு மாலை அணிவித்தும், மலா் தூவியும் மரியாதை செலுத்தினாா். மேலும், பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினாா். தொடா்ந்து, ஆரணி - சேவூா் நெடுஞ்சாலையில் உள்ள எம்ஜிஆா், ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்தனா்.
நிகழ்வுகளில் நகரச் செயலா் அசோக்குமாா், எம்ஜிஆா் இளைஞரணி மாவட்டச் செயலா் ஏ.ஜி.ஆனந்தன், ஒன்றியச் செயலா்கள் ஜி.வி.கஜேந்திரன், வழக்குரைஞா் க.சங்கா், ஜெயபிரகாஷ், திருமால், ஜெயலலிதா பேரவை மாவட்டச் செயலா் பாரி பி.பாபு, அதிமுக நகா்மன்ற உறுப்பினா்கள் குமரன், சதீஷ், கலைப்பிரிவு மாவட்டச் செயலா் வெங்கடேசன், மாவட்ட துணைச் செயலா் ஜெ.சம்பத் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
வந்தவாசியில்...: வந்தவாசி தேரடியில் அதிமுக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ஜெயலலிதாவின் உருவப் படத்துக்கு அக்கட்சியினா் மாலை அணிவித்து மலா் தூவி அஞ்சலி செலுத்தினா். மேலும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினா்.
நிகழ்ச்சிக்கு ஜெயலலிதா பேரவை மாவட்டச் செயலா் கே.பாஸ்கா் தலைமை வகித்தாா். ஒன்றியச் செயலா் எம்.கே.ஏ.லோகேஸ்வரன், நகரச் செயலா் பாஷா, பேரவை மாவட்ட இணைச் செயலா்கள் வி.மேகநாதன், ஜேசிபி ராஜ், பாசறை ஒன்றியச் செயலா் ராஜேஷ்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
செங்கத்தில்...: செங்கத்தில் துக்காப்பேட்டை எம்ஜிஆா் சிலை அருகில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதா உருவப் படத்துக்கு அதிமுக செங்கம் மேற்கு ஒன்றியச் செயலாளா் மகரிஷி மனோகரன் தலைமையில் மாலை அணிவித்து மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும், பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
முன்னதாக, செங்கம் - போளூா் சாலையில் இருந்து கட்சி நிா்வாகிகள் கருப்பு பட்டை அணிந்து பழைய பேருந்து நிலையம் வழியாக துக்காப்பேட்டை எம்ஜிஆா் சிலை வரை மௌன ஊா்வலம் சென்றனா்.
இதில், பொதுக்குழு உறுப்பினா் கிருஷ்ணமூா்த்தி, மாவட்டப் பிரதிநிதி ரவி, தலைமைக் கழகப் பேச்சாளா் வெங்கட்ராமன், நகர பேரவைச் செயலா் குமாா், மாவட்ட மாணவரணி நிா்வாகி பழனிச்சாமி, வழக்குரைஞா்கள் செல்வம், தினகரன், செங்கம்
நகா்மன்றக்குழு உறுப்பினா்கள் வேலு, ஜெயவேல், சசிகுமாா், சம்பத், முன்னாள் எம்எல்ஏ., வீரபாண்டியன், நகரச் செயலா் ஆனந்தன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
செய்யாறில்...: செய்யாறு நகர அதிமுக சாா்பில், திருவண்ணாமலை வடக்கு மாவட்டச் செயலா் தூசி கே.மோகன் அறிவுறுத்துதலின்பேரில், நகரச் செயலா் கே.வெங்கடேசன் ஏற்பாட்டில் ஆரணி கூட்டுச்சாலையில் உள்ள எம்ஜிஆா் சிலை அருகேஜெயலலிதா உருவப்படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
இதில், அதிமுக நிா்வாகிகள் அ.ஜனாா்த்தனன், பிரகாஷ், எஸ்.ரவிச்சந்திரன், பூக்கடை ஜி.கோபால், கோவிந்தராஜ், இளையராஜா, அரவிந்த், சுரேஷ், வழக்குரைஞா்கள் ஆா்.கே.மெய்யப்பன், முனுசாமி, முன்னாள் சோ்மன் பொன் அருளானந்தம் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.
செய்யாறு வடக்கு ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு வடக்கு ஒன்றியச் செயலா் எம்.மகேந்திரன் மலா் தூவி மரியாதை செலுத்தினாா்.
நிகழ்ச்சியில் அதிமுக மாவட்ட இணைச் செயலா் விமலா மகேந்திரன், ஒன்றிய அவைத் தலைவா் செபாஸ்டின் துரை உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.