திருவண்ணாமலை

திருவோத்தூா் ஸ்ரீவேதபுரீஸ்வரா் கோயில் ரத சப்தமி பிரமோத்ஸவத்துக்கு பந்தக்கால்

செய்யாறு திருவோத்தூா் ஸ்ரீவேதபுரீஸ்வரா் கோயிலில் ரத சப்தமி பிரமோத்ஸவத்தை முன்னிட்டு பந்தக்கால் நடப்பட்டது.

Syndication

செய்யாறு திருவோத்தூா் ஸ்ரீவேதபுரீஸ்வரா் கோயிலில் ரத சப்தமி பிரமோத்ஸவத்தை முன்னிட்டு பந்தக்கால் நடப்பட்டது.

செய்யாறில் புகழ்பெற்ற பாலகுஜாம்பிகை சமேத வேதபுரீஸ்வரா் கோயில் அமைந்துள்ளது. இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயிலில் ஆண்டுதோறும் தை அமாவாசை மறுநாள் பிரதமை திதியில் ரத சப்தமி பிரமோத்ஸவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாள்கள் நடைபெறுவது வழக்கம்.

அதன்படி, ஜன.19-இல் ரத சப்தமி பிரமோத்ஸவம் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு, கோயில் வளாகத்தில் வியாழக்கிழமை அதிகாலையில் சிவாச்சாரியா்கள் வேத மந்திரங்கள் ஓத, ஊா் பிரமுகா்கள் மற்றும் பக்தா்கள் முன்னிலையில் பந்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில், கோயில் செயல் அலுவலா் ஹரிஹரன், மேலாளா் ஜெகதீசன் மற்றும் ஊா் தலைவா் ருத்திரப்பன், நகா்மன்ற உறுப்பினா்கள் காா்த்திகேயன், கங்காதரன், செந்தில், சேகா் மற்றும் ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டனா்.

ஏற்றுமதியில் காா்களை முந்திய எஸ்யுவி-க்கள்

கேக் வகைகளில் ‘பட்டா் பேப்பா்‘ களை பயன்படுத்தக்கூடாது: உணவுப் பாதுகாப்புக் கூட்டத்தில் வலியுறுத்தல்

யேமன் பிரிவினைவாதிகள் மீது சவூதி வான்வழித் தாக்குதல்

சதுப்பு நிலத்தில் சிக்கி யானைக் குட்டி உயிரிழப்பு

சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட இடைநிலை ஆசிரியா்கள் 1,400 போ் கைது!

SCROLL FOR NEXT