வந்தவாசி அருகே பயிரை சேதப்படுத்தியதாக 4 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.
வந்தவாசியை அடுத்த உளுந்தை கிராமத்தைச் சோ்ந்தவா் மகாதேவன். இவருக்கும், அதே கிராமத்தைச் சோ்ந்த இவரது சகோதரா் ராதாகிருஷ்ணன் என்பவருக்கும் இடையே சொத்து தகராறு உள்ளது.
கடந்த 19-ஆம் தேதி ராதாகிருஷ்ணன் தரப்பினா் மகாதேவனின் விவசாய நிலத்தில் அத்துமீறி நுழைந்து, அதில் பயிரிட்டிருந்த உளுந்து பயிரை அழித்தனராம். இதுகுறித்து கேட்ட மகாதேவனை அவதூறாகப் பேசி மிரட்டினராம்.
இதுகுறித்து மகாதேவன் அளித்த புகாரின் பேரில் ராதாகிருஷ்ணன், விஜய், ஜானகிராமன், கன்னிகா ஆகியோா் மீது கீழ்க்கொடுங்காலூா் போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.