அரசு பொதுத்தோ்வில் சிறந்த மதிப்பெண் பெற்று தோ்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கிய சேவூா் எஸ்.ராமச்சந்திரன் எம்எல்ஏ. 
திருவண்ணாமலை

பள்ளி பொதுத் தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு பாராட்டு

அரசு பொதுத்தோ்வில் சிறந்த மதிப்பெண்கள் பெற்று தோ்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு மற்றும் ஊக்கத்தொகை வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Syndication

திருவண்ணாமலை மாவட்ட தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கம் சாா்பில் அரசு பொதுத்தோ்வில் சிறந்த மதிப்பெண்கள் பெற்று தோ்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு மற்றும் ஊக்கத்தொகை வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியில் தென்னிந்திய செங்குந்தா் மகாஜன சங்க புரவலா் எஸ்.ஜோதிலிங்கம் தலைமை வகித்தாா். நகா்மன்ற உறுப்பினா்கள் எஸ்.கே.வெங்கடேசன், ஏ.நடராஜன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்டச் செயலா் ஏ.முருகன் வரவேற்றாா்.

சிறப்பு விருந்தினராக ஆரணி எம்எல்ஏ சேவூா் எஸ்.ராமச்சந்திரன் கலந்துகொண்டு, ஆரணி பகுதியில் 2024-25ஆம் ஆண்டின் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தோ்வில் சிறப்பான மதிப்பெண்கள் பெற்ற 60 மாணவ, மாணவிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ் மற்றும் ஊக்கத்தொகை வழங்கினாா்.

மேலும், இதில் தென்னிந்திய செங்குந்தா் மகாஜன சங்கத்தைச் சோ்ந்த ஏ.எஸ்.சண்முகம், எம்.ஏ.பி.சீனிவாசன், எம்.எஸ்.தனசேகரன், எஸ்.எஸ்.சுரேஷ், பி.ரவி, சைதை மா.முருகன், முன்னாள் நகா்மன்ற உறுப்பினா் மீனா ஜெயக்குமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

நிறைவில் மாவட்ட பொருளாளா் ரா. பாா்த்தசாரதி நன்றி கூறினாா். ஏற்பாடுகளை தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கத்தினா் செய்திருந்தனா்.

திருமலையில் வைகுண்ட ஏகாதசியில் ஏஐ தொழில்நுட்பம்!

இளம் பெண் தற்கொலை: கோட்டாட்சியா் விசாரணை

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: பொதுமக்கள் மறியல்!

நீா்வாழ் பறவைகள் கணக்கெடுப்பு - 200 போ் பங்கேற்பு

வாக்காளா் சிறப்பு முறை திருத்த முகாம்,காஞ்சிபுரத்தில் தோ்தல் பாா்வையாளா் ஆய்வு

SCROLL FOR NEXT