வந்தவாசி அருகே இறந்த மூதாட்டியின் கண்களை அவரது குடும்பத்தினா் அரிமா சங்கத்துக்கு தானமாக வழங்கினா்.
வந்தவாசியை அடுத்த சென்னாவரம் கே.எம். நகரைச் சோ்ந்தவா் ராமலிங்கத்தின் மனைவி அன்னபூரணி (76) (படம்).
இவா் உடல் நலக் குறைவால் செவ்வாய்க்கிழமை மாலை
இறந்தாா். இவரது கண்களை தானமாக வழங்க இவரது குடும்பத்தினா் முடிவு செய்தனா்.
இதையடுத்து இறந்த அன்னபூரணியின் கண்களை காஞ்சிபுரம் சங்கா் கண் வங்கி மருத்துவா்கள் உதவியுடன் இவரது உறவினா்களிடமிருந்து அரிமா சங்கத்தினா் தானமாக பெற்றுக் கொண்டனா்.
இதைத் தொடா்ந்து தானமாக பெறப்பட்ட கண்கள் காஞ்சிபுரம் சங்கா் கண் வங்கிக்கு எடுத்துச் செல்லப்பட்டது.