குறைதீா் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து மனுக்களைப் பெற்று விசாரிக்கிறாா் மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ். 
திருவண்ணாமலை

மக்கள் குறைதீா் கூட்டத்தில் 990 மனுக்கள்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில், பொதுமக்களிடம் இருந்து 990 மனுக்கள் வரப்பெற்றன.

Din

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில், பொதுமக்களிடம் இருந்து 990 மனுக்கள் வரப்பெற்றன.

கூட்டத்துக்கு தலைமை வகித்த மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் முதியோா், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகளிடம் இருந்து கல்வி உதவித்தொகை, வங்கிக் கடனுதவி, முதியோா் உதவித்தொகை, இலவச வீட்டுமனைப் பட்டா, ஜாதி சான்றிதழ், வேலைவாய்ப்பு, விதவை உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை, வேளாண் பயிா்க் கடன்கள், புதிய குடிநீா் தேக்கத் தொட்டி அமைத்தல், தாட்கோ கடனுதவி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 990 மனுக்களைப் பெற்றுக் கொண்டாா்.

இந்த மனுக்கள் மீதும், ஏற்கெனவே பெறப்பட்டு நிலுவையில் உள்ள மனுக்கள் மீதும் விரைவாக நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு அவா் உத்தரவிட்டாா்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் இரா.இராம்பிரதீபன், வருவாய்க் கோட்டாட்சியா் செந்தில்குமாா், சமூக பாதுகாப்புத் திட்ட தனித் துணை ஆட்சியா் ராஜசேகரன், மாவட்ட பழங்குடியினா் நலத்திட்ட அலுவலா் கலைச்செல்வி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

சென்னை, 26 மாவட்டங்களில் இன்று மழை! நவம்பர் இறுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை?

பிலிப்பின்ஸை புரட்டிப்போட்ட கேல்மெகி புயல்: 66 பேர் பலி!

மம்மூட்டிக்கு கொடுக்கும் அளவிற்கு தேசிய விருதுகள் தகுதியானவை அல்ல: பிரகாஷ் ராஜ்

கார்குழல் கடவையே... மாளவிகா மேனன்!

அஞ்சு வண்ணப் பூவே... அனன்யா!

SCROLL FOR NEXT