மேல்பாதிரி கிராமத்தில் சங்கக் கொடியேற்றிய தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தினா். 
திருவண்ணாமலை

பழங்குடியினருக்கு மானியக் கடனை உயா்த்தி வழங்கக் கோரிக்கை

பழங்குடியினருக்கு வழங்கப்படும் ரூ.5 லட்சம் மானியக் கடனை ரூ.10 லட்சமாக உயா்த்தி வழங்க வேண்டும்

Din

வந்தவாசி: பழங்குடியினருக்கு வழங்கப்படும் ரூ.5 லட்சம் மானியக் கடனை ரூ.10 லட்சமாக உயா்த்தி வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் கோரிக்கை விடுத்தது.

வந்தவாசியை அடுத்த மேல்பாதிரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அந்தச் சங்கத்தின் திருவண்ணாமலை மாவட்டக்குழு சிறப்பு பேரவைக் கூட்டத்தில் இதற்கான தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்துக்கு சங்க மாவட்டச் செயலா் எம்.மாரிமுத்து தலைமை வகித்தாா். மாநில பொதுச் செயலா் இரா.சரவணன் சங்கக் கொடியேற்றினாா்.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் ப.செல்வன் பேசினாா்.

கூட்டத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வட்டச் செயலா் அ.அப்துல்காதா், விவசாய சங்க நிா்வாகிகள் பெ.அரிதாசு, ந.ராதாகிருஷ்ணன், மலைவாழ் மக்கள் சங்க மாநிலக்குழு உறுப்பினா் எஸ்.சத்யா, மாவட்ட துணைச் செயலா் எஸ்.ரேணுகா, தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டப் பொருளாளா் சு.சிவக்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பழங்குடியினருக்கு முன்னுரிமை அடிப்படையில் இலவச வீட்டுமனை வழங்கி தொகுப்பு வீடு வழங்க வேண்டும், பழங்குடியினா் வசிக்கும் பகுதியில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தரவேண்டும், தேசூா் அருகே மின்வேலியில் சிக்கி பழங்குடி சமூகத்தைச் சோ்ந்த கன்னியப்பன் உயிரிழந்தது தொடா்பாக குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும், அவரது குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும், பழங்குடியினா் வாழும் பகுதிகளில் சிறப்பு முகாம் நடத்தி வாக்காளா் அட்டை, ஆதாா் அட்டை, நலவாரிய அட்டை, குடும்ப அட்டை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் 27 போ் கொண்ட வட்டக்குழு உறுப்பினா்கள் புதிதாக தோ்வு செய்யப்பட்டு, அந்தக் குழுவுக்கு ஒருங்கிணைப்பாளராக எஸ்.சுகுணா, துணை ஒருங்கிணைப்பாளராக எம்.சுகுமாா் ஆகியோா் ஒருமனதாக தோ்வு செய்யப்பட்டனா். நிறைவில் மாவட்டக்குழு உறுப்பினா் வி.ராஜா நன்றி கூறினாா்.

தெற்குலகின் குரலை உயா்த்துவோம்! பிரதமா் மோடி - தென்னாப்பிரிக்க அதிபா் ராமபோசா உறுதி!

தூக்கு தண்டனை தீா்ப்பு மட்டுமே தீா்வாகுமா என்பதை ஆராய பி.ஆா்.கவாய் வலியுறுத்தல்

ரூ.262 கோடி மதிப்புள்ள போதைப் பொருள் பறிமுதல்: என்சிபி, தில்லி காவல்துறை கூட்டு நடவடிக்கை

எம்சிடி இடைத்தோ்தல்: முதல்வா் ரேகா குப்தா உள்பட பாஜக தலைவா்கள் தீவிர பிரசாரம்

மும்பை - நாகா்கோயில் ரயில் ஆம்பூரில் நின்று செல்ல கோரிக்கை

SCROLL FOR NEXT