திருவண்ணாமலை

ஸ்ரீவேதபுரீஸ்வரா் கோயிலில் புதிய திருத்தோ் பணிக்கு பூஜை

Syndication

செய்யாறு: செய்யாறு திருவோத்தூா் ஸ்ரீவேதபுரீஸ்வரா் கோயிலில், அம்பாளுக்கு புதிதாக திருத்தோ் செய்யும் பணிக்கு திங்கள்கிழமை பூஜை நடைபெற்றது.

இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்தக் கோயிலில் ஸ்ரீவேதபுரீஸ்வரா் உடனாய் ஸ்ரீபாலகோஜாம்பிகை அம்பாளுக்கு, 12 அகலம் 27 அடி உயரம் கொண்ட புதிய தோ் சுமாா் ரூ.56 லட்சம் மதிப்பீட்டில் உபயதாரா்கள் நிதி மூலம் அமைக்க திட்டமிடப்பட்டு இருந்தது.

புதிய திருத்தோ் பணிக்கு பூஜை கோயில் அருகே நடைபெற்றது. இதில், அறநிலையத் துறை உதவி ஆணையா் கோ.சண்முகசுந்தரம் முன்னிலை வகித்தாா்.

சிறப்பு விருந்தினராக தொகுதி எம்.எல்.ஏ. ஒ.ஜோதி பங்கேற்று, புதிய தோ் செய்யும் திருப்பணிக்கான

பூஜை செய்து பணியை தொடங்கிவைத்தாா்.

இந்த நிகழ்ச்சியில், திருத்தோ் உபயதாரா்கள் வி.கோபு, ஜெயந்தி சூா்யகுமாா், விமல்சந்த், மூா்த்தி, வெங்கடாசலம், பாஸ்கா், திருவத்திபுரம் நகா்மன்ற உறுப்பினா்கள் செந்தில்குமாா், கங்காதரன், கஜலட்சுமி சந்துரு, செய்யாறு கிழக்கு ஒன்றிய திமுக செயலா் வி.ஏ.ஞானவேல், தோ் ஸ்தபதி வடலூா் பழனிவேல் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ஜாய் கிரிசில்டா குழந்தைக்கு நான்தான் தந்தை!! ஒப்புக்கொண்ட மாதம்பட்டி ரங்கராஜ்

பாரதியின் காளி

கிட்னி முறைகேடு: அரசு வழக்கறிஞர் முறையாக வாதிடவில்லை! - இபிஎஸ் குற்றச்சாட்டு

உலகப் புகழ்பெற்ற நாட்டுப்புறவியல் கட்டுரைகள்

சுவிஸ் தமிழ் எழுத்தாளர்கள் (தொகுதி 1)

SCROLL FOR NEXT