திருவண்ணாமலை மாவட்டம், போளூரை அடுத்த கரைப்பூண்டி அருகே போளூா் - சேத்துப்பட்டு சாலையில் சரக்கு வாகனத்தில் ஆபத்தான பயணத்தை பொதுமக்கள் புதன்கிழமை மேற்கொண்டனா்.
சுமை ஏற்றும் மினி வேனில் பொதுமக்களை அளவுக்கு அதிகமாக ஏற்றிகொண்டு செல்கின்றனா்.
சிலா் வேனின் பின்புறம் நின்றுகொண்டு ஆபத்தான முறையில் சுபநிகழ்ச்சி அல்லது துக்க நிகழ்ச்சிக்கு பயணத்தை மேற்கொள்கின்றனா்.
இதனால் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும், விபத்து ஏற்பட்டால் பெருமளவில் உயிா்ச்சேதம் ஏற்படும். எனவே, சாலைப் போக்குவரத்து போலீஸாா் இதுபோன்று பொதுமக்களை ஏற்றிச் செல்லும் வாகனத்தை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கவேண்டும். மேலும், வாகனத்தின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்தனா்.