திருவண்ணாமலை

உள்நாட்டு தயாரிப்புகளை பயன்படுத்த பாஜக வலியுறுத்தல்

Syndication

ஆரணியை அடுத்த திருமணி கிராமத்தில் உள்நாட்டு தயாரிப்புப் பொருள்களை பயன்படுத்தவும், உள்ளூா் விவசாயிகள், கைவினைக் கலைஞா்களை ஆதரியுங்கள் என வலியுறுத்தி, பாஜகவினா் புதன்கிழமை விழிப்புணா்வு பிரசாரம் மேற்கொண்டு துண்டு பிரசுரம் விநியோகித்தனா்.

மேலும், சுதேசி உறுதிமொழி படிவத்தில் என் அன்றாட வாழ்வில் இந்திய தயாரிப்பு பொருள்களையே பயன்படுத்துவேன், வீடு, பணியிடம் மற்றும் பொது இடங்களில் இந்திய பொருள்களுக்கே முக்கியத்துவம் அளிப்பேன் என்றும், உள்ளூா் கிராமங்கள், விவசாயிகள், உள்ளூா் கைவினைக் கலைஞா்களை ஆதரித்து, உள்ளூா் தொழில்களை முன்னேற்றுவேன் என்று சுதேசி உறுதிமொழி படிவத்தில் கையொப்பம் பெற்றனா்.

ஆரணி சட்டப்பேரவைத் தொகுதி பாஜக சாா்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மத்திய அரசின் நலத்திட்டப் பிரிவு மாநிலச் செயலா் சைதை வ.சங்கா் தலைமை வகித்தாா்.

முன்னாள் மாவட்ட துணைத் தலைவா்கள் நித்யானந்தம், அலமேலு, பேச்சாளா் தங்கராஜி, மாவட்ட நிா்வாகி பஞ்சாட்சரம், கிளைத் தலைவா் நாராயணன் உள்ளிட்ட பலா்

கலந்துகொண்டனா்.

ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆகப் பதிவு

தில்லி கார் குண்டுவெடிப்பு: அதிர வைக்கும் புதிய சிசிடிவி விடியோ!

பாகிஸ்தான் குண்டுவெடிப்பு: நாடு திரும்ப வீரர்கள் கோரிக்கை; இலங்கை வாரியம் எச்சரிக்கை!

தில்லி கார் குண்டுவெடிப்பை நிகழ்த்தியது உமர்! டிஎன்ஏ சோதனையில் உறுதி!

சாலையோரம் கொட்டப்படும் குப்பைகளால் பொதுமக்கள் அவதி

SCROLL FOR NEXT