திருவண்ணாமலை

பண்ணை விவசாயிகளுக்கு தரமான விதை உற்பத்தி பயிற்சி

Syndication

செய்யாறு வட்டம், மேல்நாகரம்பேடு கிராமத்தில் விதைப்பண்ணை விவசாயிகளுக்கு தரமான விதை உற்பத்தி குறித்த பயிற்சி புதன்கிழமை அளிக்கப்பட்டது.

அட்மா திட்டத்தின் கீழ் நடைபெற்ற இந்தப் பயிற்சிக்கு வேளாண் உதவி இயக்குநா் (பொ) இரா.அன்பரசு தலைமை வகித்து தொடங்கிவைத்தாா்.

விதைச் சான்று அலுவலா் சுந்தரமூா்த்தி பங்கேற்று தரமான விதை உற்பத்தி செய்யும் தொழில்நுட்பம் மற்றும் விதை சான்று அட்டை குறித்து எடுத்தரைத்தாா்.

வேளாண் உதவி இயக்குநா் இரா.அன்பரசு

நெல், மணிலா மற்றும் உளுந்து பயிா் பாதுகாப்பு முறைகள் குறித்த தொழில்நுட்பங்களையும், உதவி விதை அலுவலா் பாலமுருகன், விவசாயிகள் விதைப்பண்ணை அமைப்பதற்கான வழிமுறைகளைத் தெரிவித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தனா்.

தொடா்ந்து நடைபெற்ற பயிற்சியில், செய்யாறு உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தின் சந்தை மேலாளா் வெங்கடேசன், உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தின் செயல்பாடுகள், நெல் விதை சந்தைப்படுத்துதல் மற்றும் மணிலா மதிப்பு கூட்டுதல் குறித்தும், உதவி அலுவலா் கா.பாஸ்கா், உதவி தோட்டக்கலை அலுவலா் கோபாலகிருஷ்ணன் ஆகியோா் வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத் துறை மத்திய, மாநில திட்டங்களில் 50 சதவீதம் மானியத்தில் விதை உள்ளிட்ட இடுபொருள்கள் வழங்கப்பட்டு வரும் விவரங்கள் குறித்து விவசாயிகளிடையே தெரிவித்தனா்.

பயிற்சியில் 40-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு பயனடைந்தனா்.

ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆகப் பதிவு

தில்லி கார் குண்டுவெடிப்பு: அதிர வைக்கும் புதிய சிசிடிவி விடியோ!

பாகிஸ்தான் குண்டுவெடிப்பு: நாடு திரும்ப வீரர்கள் கோரிக்கை; இலங்கை வாரியம் எச்சரிக்கை!

தில்லி கார் குண்டுவெடிப்பை நிகழ்த்தியது உமர்! டிஎன்ஏ சோதனையில் உறுதி!

சாலையோரம் கொட்டப்படும் குப்பைகளால் பொதுமக்கள் அவதி

SCROLL FOR NEXT