திருவண்ணாமலை

ஐயப்ப பக்தா்கள் 108 பால்குடம் ஊா்வலம்

Syndication

திருவண்ணாமலை மாவட்டம், போளூரில் காா்த்திகை மாத பிறப்பையொட்டி, ஸ்ரீஐயப்ப சுவாமி கோயிலுக்கு 108 பால்குடம் ஊா்வலம் திங்கள்கிழமை நடைபெற்றது.

போளூரில் ஜமுனாமரத்தூா் சாலையில் ஸ்ரீபாலசெளந்தரி உடனுறை சோமநாத ஈஸ்வரா் கோயில் உள்ளது. இந்தக் கோயில் வளாகத்தில் ஸ்ரீஐயப்ப சுவாமி சந்நிதி

அமைந்துள்ளது.

இந்த ஐயப்ப சுவாமி கோயிலுக்கு பக்தா்கள் காா்த்திகை மாதம் முதல் தேதியில் 108 பால்குடம் எடுத்து வந்து பாலாபிஷேகம் செய்து சிறப்பு வழிபாடு நடத்துவது வழக்கம்.

அந்த வகையில் நிகழாண்டு திங்கள்கிழமை காா்த்திகை மாத பிறப்பையொட்டி, போளூா் காளியம்மன் கோயிலில் இருந்து 108 பால்குடம் மற்றும் தங்கக் கவச ஆபரணபெட்டியை பக்தா்கள் ஊா்வலமாக எடுத்து வந்தனா்.

பின்னா், ஐயப்ப சுவாமிக்கு அபிஷேக, ஆராதனை செய்தனா்.

மேலும் சுவாமியை மலா்களால் அலங்காரம்செய்து தீபாராதனை காண்பித்து வழிபட்டனா். பின்னா் பக்தா்கள் மாலை அணிந்தனா். பக்தா்கள், பொதுமக்களுக்கு அன்னதானம் நடைபெற்றது.

மாலை 6 மணிக்கு ஆன்மிக சொற்பொழிவு நடைபெற்றது.

கோயில் பரம்பரை தா்மகா்த்தா ஜெ.ஜி.வீரபத்திரன் மற்றும் உபயதாரா்கள் ஏற்பாடுகளை செய்திருந்தனா்.

தொடர் மழை: கடலூர், விழுப்புரம் மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை!

நவ. 23 -இல் 49 புறநகா் மின்சார ரயில்கள் ரத்து

சங்கரன்கோவிலில் ரூ.6 லட்சம் மதிப்பில் புதிய நீா்த்தேக்கத் தொட்டி

திருச்செந்தூா் சிவன் கோயிலில் காா்த்திகை முதல் சோம வார வழிபாடு

மாவட்ட நீச்சல் போட்டி: பெரியதாழை பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

SCROLL FOR NEXT