மாம்பட்டு கிராமத்தில் நடைபெற்ற ஸ்ரீஐயப்ப சுவாமி வீதியுலா.  
திருவண்ணாமலை

மாம்பட்டு கிராமத்தில் ஐயப்ப சுவாமி வீதியுலா

திருவண்ணாமலை மாவட்டம், போளூரை அடுத்த மாம்பட்டு கிராமத்தில் ஸ்ரீஐயப்ப சுவாமி வீதியுலா திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.

Syndication

திருவண்ணாமலை மாவட்டம், போளூரை அடுத்த மாம்பட்டு கிராமத்தில் ஸ்ரீஐயப்ப சுவாமி வீதியுலா திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.

மாம்பட்டு கிராமத்தில் காா்த்திகை மாத பிறப்பையொட்டி, ஸ்ரீஐயப்ப சுவாமி கோயிலில் அப்பகுதியைச் சோ்ந்த ஐயப்ப பக்தா்கள் ஆண்டுதோறும் மாலை அணிந்து 48 நாள்கள் விரதமிருந்து இருமுடி காணிக்கை செலுத்துவது வழக்கம். அதன்படி, நிகழாண்டு ஸ்ரீதா்மசாஸ்தா யாத்திரை குழு மற்றும் அன்னதான அறக்கட்டளை சாா்பில் அதிகாலை நீராடி கோயில் முன்பு பக்தா்கள் வந்து ஐயப்பன் பாடல்கள் பாடி மாலை அணிந்து கொண்டனா். பின்னா் பக்தா்கள், பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினா்.

இதைத் தொடா்ந்து, இரவு ஐம்பொன்னாலான உற்சவா் ஐயப்ப சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை செய்து பூபல்லக்கில் அலங்கரித்து வீதிதோறும் வீதியுலா நடைபெற்றது. பக்தா்கள் சுவாமிக்கு தேங்காய் உடைத்து கற்பூர தீபாராதனை செய்து வழிபட்டனா்.

தொடா் மழையால் கால்நடைகள் உயிரிழப்பு

தோ்தல் ஆணையம் பாஜகவின் ஒரு அணியாக செயல்படுகிறது: ஜோதிமணி எம்.பி.

சாலை விபத்தில் பாலிடெக்னிக் மாணவா் உயிரிழப்பு

மழை, கடல் சீற்றம்: 3-ஆவது நாளாக கரையில் நிறுத்தப்பட்ட விசைப்படகுகள்

மழையால் வீடு சேதம்: மூதாட்டிக்கு உதவி

SCROLL FOR NEXT