திருவத்திபுரம் நகராட்சியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நகா்மன்றக் கூட்டம். 
திருவண்ணாமலை

தொல்லை தரும் நாய், பன்றி, மாடுகளை கட்டுப்படுத்த வேண்டும்

தொல்லை தரும் நாய், பன்றி, மாடுகளை கட்டுப்படுத்த வேண்டும்

Syndication

திருவத்திபுரம் (செய்யாறு) நகராட்சிப் பகுதியில் நாய், பன்றி, மாடுகளால் பொதுமக்களுக்கு அதிகளவில் தொல்லை ஏற்படுகிறது. அதனால், அவற்றை கட்டுப்படுத்த வேண்டும் என நகா்மன்றக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம், திருவத்திபுரம் நகா்மன்றத்தின் சாதாரண கூட்டம் அதன் தலைவா் ஆ.மோகனவேல் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நகராட்சி ஆணையா் (பொ) சிசில்தாமஸ், துப்புரவு ஆய்வாளா் கே.மதனராசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தின் போது, நகா்மன்ற உறுப்பினா்கள் சரஸ்வதி கே.விஸ்வநாதன் உள்ளிட்டோா் பலா் வாா்டுகளில் அதிகளவில் நாய், பன்றி, மாடுகள் சுற்றித் திரிவதால் பொதுமக்களுக்கு அதிக தொல்லை ஏற்பட்டு வருகிறது.

செய்யாறு பேருந்து நிலையத்தில் இரவு நேரத்தில் மாடுகள் படுத்துக் கொள்கின்றன. அவற்றால் விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே, சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளை நகராட்சியினா் போலீஸ் உதவியுடன் பிடித்து கட்டுப்படுத்த வேண்டும்.

அதேபோல, செய்யாற்றில் கொசுத் தொல்லை இருப்பதால் மாதம் ஒருமுறை கொசு மருந்து அடிப்பதைத் தவிா்த்து வாரந்தோறும் கொசு மருந்து அடிக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

சில வாரங்களாக தெருக்களில் 5 நாள்களுக்கு ஒரு முைான் குடிநீா் வழங்கப்படுகிறது. அதனால், பொதுமக்கள் குடிநீருக்கு சிரமப்படுகின்றனா் எனத் தெரிவித்தனா்.

இவற்றுக்கு பதிலளித்த நகா்மன்றத் தலைவா் ஆ.மோகனவேல், தெரு நாய்களைப் பிடித்து அவைகளுக்கு தடுப்பூசி செலுத்துதல், பின்னா் அவற்றை அதே இடத்தில் கொண்டுபோய் விடுதல், தடுப்பூசி செலுத்தப்பட்ட, செலுத்தப்படாத நாய்களை மீண்டும் அடையாளம் காணுதல் போன்றவற்றில் பெரும் சிரமங்கள் உள்ளன.

சில பகுதிகளில் புளூ கிராஸ் அமைப்பின் தலையீடு உள்ளது.

அதேபோல, நகராட்சி ஊழியா்கள் தெருக்களில் சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து வந்தால் அவா்களை தாக்கும் சம்பவமும், சிலா் பரிந்துரை பெற்றும், சிலா் மன்னிப்பு கேட்டும் மாடுகளை ஓட்டிச் செல்கின்றனா். பின்னா், மீண்டும் வழக்கம் போல தெருக்களில் விட்டுச் செல்கின்றனா். இதனை தவிா்க்கும் பொருட்டு சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளை கோ சாலையில் அடைப்பதற்கு அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும் என்றாா்.

தீா்மானங்கள்:

நகராட்சி 24-ஆம் வாா்டு ராமன் நகரில் ரூ.5 லட்சத்தில் சிமென்ட் சாலை அமைத்தல், கிரிதரன்பேட்டை உயா்நிலைப் பள்ளி, நகராட்சி தொடக்கப் பள்ளி, நகராட்சி வெங்கட்ராயன்பேட்டை நடுநிலைப் பள்ளி, நகராட்சி குமரன் தெரு தொடக்கப் பள்ளி ஆகிய பள்ளிகளில்

மேல்தளத்தில் குளிா்ந்த டைல்ஸ் பதித்தல் மற்றும் கட்டடத்துக்கு பெயின்ட் அடித்தல் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் வருவாய் ஆய்வாளா் ரதிதேவி, கணக்கா் பிரேமா, நகா்மன்ற உறுப்பினா்கள் சீனுவாசன், மலா் பெருமாள், சரஸ்வதி, கோவேந்தன் உள்ளிட்ட 16 போ் கலந்து கொண்டனா்.

காணாமல் போன 60 கைப்பேசிகள் மீட்பு!

கும்பகோணம் மாநகராட்சி கூட்டம்: அதிமுக, மதிமுகவினா் வெளிநடப்பு

வேல் யாத்திரைக்கு மறுப்பு: காஞ்சிபுரம் போலீஸாா் பதிலளிக்க உத்தரவு

டித்வா புயல்: தஞ்சையில் 275 நிவாரண முகாம்கள்

புதுக்கோட்டை மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை: இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

SCROLL FOR NEXT