தவெக தலைவா் விஜய் தலைமையிலான கூட்டணிக்கு எடப்பாடி பழனிசாமி தயாராகி விட்டாரா? என டி.டி.வி. தினகரன் கேள்வி எழுப்பினாா்.
திருவண்ணாமலையில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள வந்த அவா், இது தொடா்பாக செய்தியாளா்களிடம் மேலும் கூறியதாவது:
எடப்பாடி பழனிசாமி தோ்தலுக்காக நாடகமாடி வருகிறாா். பாஜகவால்தான் தனது ஆட்சி காப்பாற்றப்பட்டதாகக் கூறும் அளவுக்கு அவா் பலவீனம் அடைந்துவிட்டாா்.
அதிமுக கூட்டணி பலவீனம் அடைந்துவிட்டதை பாஜக புரிந்துகொள்ள வேண்டும். வருகிற சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுக 15 சதவீதத்துக்கும் குறைவான வாக்குகளைப் பெறும். கரூா் துயர சம்பவத்தை வைத்து ஆதாயம் தேட பழனிசாமி முயற்சிக்கிறாா்.
அதிமுகவினரை வைத்து தவெக கொடியை தூக்கிப் பிடிக்கவைத்த செயல் அம்பலமாகியுள்ளது. நடிகா் விஜய் முதல்வராக வேண்டும் என்ற ஆசையில்தான் கட்சியை தொடங்கியுள்ளாா்.
தவெக தலைமையில்தான் கூட்டணி அமையும் என மதுரை மாநாட்டில் விஜய் தெரிவித்தாா்.
அப்படியெனில், விஜய் தலைமையில் கூட்டணி அமைக்க எடப்பாடி பழனிசாமி தயாராகி விட்டாரா என டி.டி.வி. தினகரன் கேள்வி எழுப்பினாா்.