முகப்பு
தமிழ்நாடு

கூட்டணியில் மாநிலங்களவை எம்.பி. சீட் கேட்கப்பட்டதா? - டிடிவி தினகரன் பதில்!

அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் பேட்டி

Updated On : 25 பிப்ரவரி, 2026 at 1:46 PM
டிடிவி. தினகரன்
பகிர்:
Updated On : 25 பிப்ரவரி, 2026 at 1:37 PM

அதிமுக - பாஜக கூட்டணியில் மாநிலங்களவை எம்.பி. சீட் கேட்கவில்லை என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

நெல்லையில் செய்தியாளர்களுடன் பேசிய அவர்,

"கூட்டணியில் சுமூகமாக தொகுதிப் பங்கீடு நடைபெற்று எங்கள் கூட்டணி வெற்றியை நோக்கிச் செல்ல வேண்டும் என்பதற்காக நான் தேர்தலில் போட்டியிட வேண்டாம் என்று முடிவெடுத்தேன்.

Advertisement

Updated On : 25 பிப்ரவரி, 2026 at 1:44 PM

அதுபோல தொகுதிப் பங்கீட்டில் சுமூகமாக நிலை எட்டப்பட வேண்டும் என்பதற்காகவே, நான் பாஜக வழிநடத்தலின்படி எங்கள் கட்சிக்கு தொகுதிகள் பெறுவேன் என்று கூறினேன்.

நான் கூட்டணியில் மாநிலங்களவை எம்.பி. சீட் கேட்கவில்லை, கொஞ்சம் பொறுத்திருங்கள், கௌரவமான தொகுதிகளில் நாங்கள் போட்டியிடுவோம். நீங்கள் பாராட்டுகிற அளவுக்கு நாங்கள் முக்கியமான தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்றத்திற்குச் செல்வோம்" என்று கூறினார்.

summary

Not asking for Rajya Sabha MP seat in ADMK - BJP alliance: TTV Dhinakaran

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.