முகப்பு
தமிழ்நாடு

திமுகவை வீழ்த்தும் வேலையை மட்டும் விஜய் பார்க்கட்டும்! - டிடிவி தினகரன்

அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் பேட்டி..

Updated On : 3 பிப்ரவரி 2026, 3:46 pm IST
டிடிவி தினகரன் - கோப்புப் படம்
பகிர்:

இது தேர்தலுக்கான கூட்டணி அல்ல, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சியைக் கொண்டு வர வேண்டும் என ஒன்றாக இணைந்துள்ளதாக அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

சென்னை மெரீனாவில் அண்ணாவின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பின்னர் செய்தியாளர்களுடன் பேசிய டிடிவி தினகரன்,

"திமுகவை வீழ்த்தும் வேலையை மட்டும் விஜய் பார்க்கட்டும். தவெக தலைவர் விஜய், அதிமுக தலைவர்களான எம்ஜிஆரையும் ஜெயலலிதாவையும் ரோல் மாடல் என்று கூறிக்கொள்கிறார். ஆனால், அதிமுகவை ஊழல் கட்சி என்று விமர்சிக்கிறார். அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்தவர்தான் செங்கோட்டையன்.

Advertisement

Advertisement

விஜய் எங்களது எதிரி அல்ல, எங்களுடைய ஒரே எதிரி திமுகதான். திமுகவை வீழ்த்தவே நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்துள்ளோம்.

கனிமொழி தில்லி சென்று வந்தால் அமைதியாக இருக்கிறீர்கள், நானோ, ஓபிஎஸ் அல்லது இபிஎஸ் தில்லி சென்று வந்தால் அழுத்தம் என்கிறீர்கள், தில்லிதான் உங்கள் கட்சி தலைமையா? என்று கேட்கிறீர்கள்..

திமுகவை வீழ்த்த வேண்டும், ஜெயலலிதாவின் ஆட்சியைக் கொண்டுவர வேண்டும் என்ற நோக்கத்தில் ஒன்றாக இணைந்திருக்கிறோம்.

ஓபிஎஸ் என்னுடைய அண்ணன்தான். செங்கோட்டையன் உள்ளிட்டோர் மற்ற கட்சிகளுக்கு சென்றது வருத்தம் இருக்கிறது. ஆனால், தனிநபர்கள் சென்று ஒரு இயக்கத்தை பாதிக்க முடியாது. நாங்கள் பிரிந்திருந்ததால் போன முறை தோல்வியுற்றோம். அதனை உணர்ந்ததால் இந்த முறை இணைந்திருக்கிறோம். இது தேர்தலுக்கான கூட்டணி அல்ல. ஜெயலலிதாவின் ஆட்சியைக் கொண்டுவர வேண்டும் என்ற நோக்கத்தில் கருத்து வேறுபாடுகளை மறந்து ஒன்றாக இணைந்திருக்கிறோம். என்ன குழப்பம் விளைவிக்க நினைத்தாலும் ஒன்றும் நடக்காது" என்று தெரிவித்தார்.

summary

Let Vijay focus solely on task of defeating the DMK: TTV Dhinakaran

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments