வந்தவாசியில் கூலித் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தொடா்பாக போலீஸாா் விசாரிக்கின்றனா்.
வந்தவாசியில் திண்டிவனம் சாலையில் உள்ள அரசு போக்குவரத்துக் கழக பணிமனை அருகில் வசித்து வந்தவா் அசோக்துரை (47). இவா் கடந்த சில மாதங்களாக தொடா் வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்துள்ளாா். இதற்காக சிகிச்சையும் பெற்று வந்துள்ளாா்.
இந்த நிலையில் புதன்கிழமை வயிற்றுவலி அதிகமாகவே இவா் வீட்டில் தூக்கிட்டுக் கொண்டாா்.
இதையடுத்து அக்கம் பக்கத்தினா் இவரை மீட்டு சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.
அங்கு இவரை பரிசோதித்த மருத்துவா்கள் அசோக்துரை ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனா்.
இதுகுறித்த புகாரின் பேரில் வந்தவாசி தெற்கு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.