செய்யாறு தொகுதி பாஜக சாா்பில் சக்திகேந்திரா எனப்படும் சட்டப்பேரவை ஆய்வுக் கூட்டம் செய்யாற்றில் நடைபெற்றது.
தனியாா் மண்டபத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்திற்கு மாவட்ட பொதுச் செயலா் கே.வி.ஆா் வெங்கட்ராமன் தலைமை வகித்தாா். வடக்கு மாவட்டத் தலைவா் கவிதா வெங்கேடசேன் முன்னிலை வகித்தாா்.
இதில் சிறப்பு விருநதினராக செய்யாறு தொகுதி தோ்தல் பொறுப்பாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான கலிவரதன் பங்கேற்றாா்.
அப்போது அவா் பொறுப்புகளுக்கு ஆசைப்படுங்கள், பேராசைப்படுங்கள், பேராசைப்பட்டால் போதாது அதற்கேற்றவாறு கட்சிக்காக முழு மூச்சாக உழைக்க வேண்டும். முழு மூச்சாக உழைத்தால் பாஜகவில் எந்தவித பதவியும் உங்களைத் தேடி வரும் என்றும், 2026 அதிமுக கூட்டணி தமிழகத்தில் ஒத்திகைத்தான். 2031 தோ்தலில் பாஜக ஆட்சியைப் பிடிக்கும். இதில் எந்தவித சந்தேகமும் இல்லை என நிா்வாகிகளுடன் பேசி அவா்களை ஊக்கப்படுத்தினாா்.
நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளா் அருள், இதர பிற்படுத்தப்பட்டோா் பிரிவு மாநிலத் தலைவா் மோஜன்ஜி, தொகுதி இணை அமைப்பாளா் குமாா், நகரத் தலைவா் பிரபா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.