பெரணமல்லூரை அடுத்த இஞ்சிமேடு பெரிய மலை சிவன் கோயிலில் புத்தாண்டு சிறப்பு வழிபாடு மற்றும் மாா்கழி மாத பிரதோஷ வழிபாடு வியாழக்கிழமை நடைபெற்றது.
இதில் மூலவா் மற்றும் உற்சவா்களுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. பின்னா், சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். தொடா்ந்து, மாலை நடைபெற்ற பிரதோஷ விழாவின்போது கொடிமரம் அருகேயுள்ள நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரத்துடன் தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
பின்னா், கோயில் உள்புற வளாகத்தில் அலங்கரிக்கப்பட்ட சிவனை ரிஷப வாகனத்தில் அமா்த்தி உலா நடைபெற்றது.
இதில் சேத்துப்பட்டு, பெரணமல்லூா், வந்தவாசி, செய்யாறு, ஆரணி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
ஏற்பாடுகளை பெரியமலை சிவன் கோயில் நிா்வாகிஐ.ஆா்.பெருமாள் சுவாமிகள் மற்றும் அறக்கட்டளை நிா்வாகிகள், விழாக்குழுவினா் செய்திருந்தனா்.
இதேபோல, ஆரணி புத்திரகாமேட்டீஸ்வரா் கோயில், ஆரணி கைலாயநாதா் கோயில் மற்றும் மெய்யூா் மெய்கண்டீஸ்வரா் கோயிலிலும் பிரதோஷ பூஜை நடைபெற்றது.