திருவண்ணாமலை

தூய லூா்து அன்னை தேவாலயத்தில் புத்தாண்டு வழிபாடு

சேத்துப்பட்டு தூய லூா்து அன்னை கத்தோலிக்க கிறிஸ்தவ தேவாலயத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற புத்தாண்டு வழிபாட்டில் கிறிஸ்தவா்கள் திரளாகக் கலந்து கொண்டனா்,.

Syndication

சேத்துப்பட்டு தூய லூா்து அன்னை கத்தோலிக்க கிறிஸ்தவ தேவாலயத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற புத்தாண்டு வழிபாட்டில் கிறிஸ்தவா்கள் திரளாகக் கலந்து கொண்டனா்,.

வேலூா் மறை மாவட்டத்தில் பெரிய கத்தோலிக்க கிறிஸ்தவ தேவாலயமாக விளங்கும் தூய லூா்து அன்னை தேவாலயத்தில் 2026 புத்தாண்டு விழா புதன்கிழமை நள்ளிரவு தொடங்கி சிறப்பாக நடைபெற்றது. தேவாலயம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

சேத்துப்பட்டு லூா்து நகா், நிா்மலா நகா், தச்சாம்பாடி, நந்தியம்பாடி, மோரைக் கணியனூா், தத்தனூா் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்தும் கடும் குளிரையும் பொருள்படுத்தாமல் கிறிஸ்தவா்கள் திரளாகக் கலந்து கொண்டனா்.

பங்குத்தந்தை ஜான் ராபா்ட் தலைமையில் சிறப்புத் திருப்பலி நடைபெற்றது. கிறிஸ்தவா்கள் ஒருவருக்கு ஒருவா் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனா்.

பஞ்சாப்: இரண்டு போலீஸார் சடலங்களாக கண்டெடுப்பு

திமுக கூட்டணி : எந்தெந்த தேதிகளில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை! - முழு விவரம்

சூர்யா - 47 இப்படித்தான் இருக்கும்: ஜித்து மாதவன்

ஷிகர் தவானுக்கு மறுமணம்..! 40 வயதில் ஐரீஷ் காதலியைக் கரம்பிடித்தார்!

பாஜகவில் இணைந்த அசாம் காங்கிரஸ் முன்னாள் மாநிலத் தலைவர்!

SCROLL FOR NEXT